நீண்ட இடைவெளிக்கு பின் சின்னத்திரைக்கு மீண்டும் திரும்பும் பிரபல நடிகர்!

சின்னத்திரை நடிகர்

சன் டிவியில் புத்தம் புதிய சீரியலாக உருவாகும் சிங்கப்பெண்ணே என்ற சீரியலில் 5 பெண்களை மையமாக வைத்து கதைக்களம் பின்னப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Share this:
தமிழ் டிவி சேனல்களில் தற்போது சீரியல்கள் தான் ரசிகர்களை டிவி முன் கட்டி போட்டு வைத்துள்ளன. இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த சீரியல்களை தற்போது வயது வித்தியாசமனின்றி குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்து முதலிடத்தில் இருப்பது ரோஜா. காலை முதல் சன் டிவி-யில் பல சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை மாறிவிட்டதால் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகள் முடிந்து அனைவரும் ஒன்றாக வீட்டிற்கு வந்து சேரும் பொதுவான மாலை முதல் இரவு நேரங்களில் பல சீரியல்கள் எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பாகி வருகின்றன.

இரவு 7 மணி முதல் 9.30 அல்லது 10 மணி வரையிலான டைமிங் ஸ்லாட் பிரைம் டைம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த டைமிங்கில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலமே சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் எகிறுகின்றன. எனவே அனைவரும் வீட்டில் இருக்கும் பிரைம் டைமில் விறுவிறுப்பான, வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட ஏராளமான சீரியல்கள் தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. ரசிகர்களின் பேராதரவு பெற்றுள்ள சன் டிவியை பொருத்த வரை அபியும் நானும், சுந்தரி, வானத்தை போல, அன்பே வா, ரோஜா உள்ளிட்ட பல சீரியல்கள் மாலை 6.30 முதல் இரவு வரை ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

இதனிடையே மேலும் சில புத்தம் புதிய சீரியல்களை களமிறக்க சன் டிவி தயாராகி வருகிறது. பல ஆண்டுகளாக சன் டிவி ரசிகர்களாக இருக்கும் நபர்களுக்கு மறக்க முடியாத சீரியல்களாக மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, செல்வி, கோலங்கள், திருமதி செல்வம் உள்ளிட்ட பல சீரியல்கள் இருக்கும். இதில் மெட்டிஒலி சீரியலில் மாறுபட்ட கேரக்டரில் சந்தோஷாக நடித்து ரசிகர்களிடையே பலத்த பாராட்டை பெற்றவர் நடிகரும் சின்னத்திரை இயக்குநருமான திருச்செல்வம் வேலுசாமி.

Also Read: உனக்காக வாழ நினைக்கிறேன்! வைரலாகும் நயன்-விக்கியின் லேட்டஸ்ட் ரொமாண்டிக் போட்டோஸ்

இதில் மெகாஹிட் சீரியல்களான கோலங்கள், திருமதி செல்வம் ஆகியவற்றை இயக்கிய திருச்செல்வம் மீண்டும் சன் டிவிக்கு சிங்கப்பெண்ணே என்ற புத்தம் புதிய சீரியல் மூலம் திரும்ப உள்ளார். சிங்கப்பெண்ணே சீரியலில் 5 பெண்களை மையமாக வைத்து கதைக்களம் பின்னப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புத்தம் புதிய சீரியலில் ஹரிப்பிரியா, கனிகா, பிரபல ஆங்கர் டிடியின் சகோதரியான பிரியதர்ஷினி உட்பட பலர் நடிக்க இருப்பதாகவும் சின்னத்திரை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

  
View this post on Instagram

 

A post shared by Kamalesh pk (@actorkamalesh)

இந்நிலையில் இந்த சீரியலில் சுகன்யா நடித்த ஆனந்தம், மீனாக்குமாரி நடித்த மகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற சின்னத்திரை நடிகரும் மற்றும் டான்சருமான கமலேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை நடிகர் கமலேஷ் ஷேர் செய்து இருக்கிறார். சின்னத்திரையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் கமலேஷ் மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: