பிரபல காமெடி நடிகருக்குள் இப்படி ஒரு திறமையா ? குவியும் வாழ்த்துக்கள்..

பிரபல காமெடி நடிகருக்குள் இப்படி ஒரு திறமையா ? குவியும் வாழ்த்துக்கள்..

பிரபல நடிகர் பிரம்மானந்தம்

பிரபல காமெடி நடிகரான பிரம்மானந்தம் வரைந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் பிரம்மானந்தம். தெலுங்கில் இவர் நடிக்காத படங்களே இல்லை என்று கூறலாம். தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் மொழி, சேட்டை இப்படி பல படங்களில் நடித்து தனது அசத்தலான காமெடி மூலம் புகழ் பெற்றார்.

  பொதுவாக காமெடி நடிகர் என்றால் திரைப்படங்களில் ஹீரோக்கள் அவர்களை நக்கலடிப்பது போல் தான் அமைந்திருக்கும்.  அவர்களின் கதாபாத்திரத்தை தாண்டி காமெடி ஆக்டர்களின் நிஜ வாழ்க்கையை நாம் அவ்வளவு தெரிந்துகொள்வதில்லை. அந்த வகையில் பிரம்மானந்தத்தின் ஓவிய திறமை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

  பிரம்மானந்ததிற்கு பென்சில் ஸ்கெட்ச் செய்து மிகவும் பிடித்தமான ஒன்றாம். இவர் பொழுதுபோக்கிற்காக செய்த ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  அவர் தன் கைப்பட வரைந்துள்ள வெங்கடாசலபதி புகைப்படம் அச்சு அசலாக வெங்கடாசலபதியை நேரில் பார்க்கும் உணர்வை அளிக்கிறது.  இவர் வரைந்த புகைப்படத்தை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படத்தை அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘பிரம்மானந்தம் அவர்களிடம் வந்த விலை மதிப்பில்லாத பரிசு. 45 நாட்கள் கையினால் வரைந்த பென்சில் ஸ்கெட்ச். மிகவும் நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


  இந்த வெங்கடாசலபதி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து பிரம்மானந்தத்தை பாராட்டி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: