Home /News /entertainment /

பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க இருக்கும் பிரபல தொழிலதிபர்.. யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க இருக்கும் பிரபல தொழிலதிபர்.. யார் தெரியுமா?

காட்சி படம்

காட்சி படம்

கடந்த சில நாட்களாக வித்தியாசமான முறையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஹிட்டாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனுக்கான ப்ரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுக்கும், புத்தம் புதிதாய் லோகோ ஒன்று தயாரிக்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பிக்பாஸ் லோகோவை அதிகாரப்பூர்வமான வெளியிட்டுள்ளனர். இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் ஷோவில் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவாரஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான பதில் கிடைத்துவிடும். இதனிடையே போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதில், குக் வித் கோமாளியில் பங்கேற்ற கனி, சுனிதா, பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் அவரது மகள் ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ஜிபி முத்து, செய்தி வாசிப்பாளர் கண்மணி, விஜய் டிவி தொகுப்பாப்பார் விஜே பப்பு, தொகுப்பாளினி பிரியங்கா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக வித்தியாசமான முறையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி வருகிறது. ஆனால் அதில் கமல் சூசகமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் வரும் அக்டோபர் 3 முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளதால் பிக் பாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

also read : ’விளையாடி கொலை செய்’.. ஸ்குயிட் கேம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு ?



இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள மற்றொரு போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தொழிலதிபரான ரேணுகா பிரவீன் என்பவர் பிக்பாஸ் பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பியூட்டி சலூன் நடத்தி வரும் ரேணுகா பிரவீன், இங்கிலாந்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தற்போது சென்னையில் சலூன் நடத்தி வரும் நிலையில், சமந்தா, குஷ்பூ, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் இவருக்கு ரெகுலர் கஷ்டமர் என தகவல் வெளியாகியுள்ளது.

also read : 'தனிமையே பேரின்பம்'.. சர்ச்சையை கிளப்பிய செல்வராகவன் ட்வீட்

வழக்கமாக பிக் பாஸில் வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் இடம்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த சீசனுக்கு ரேணுகா பிரவீன் தான் கலந்துகொள்ள போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் ஷோ 100 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும், நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வது முதல் என்ன மாதிரியான போட்டிகள் நடக்கும் என்பது வரை பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நாள் முழுவதும் டிரெண்ட் ஆகும். இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bigg Boss Tamil, Kamal Haasan

அடுத்த செய்தி