• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பூவே உனக்காக சீரியலில் இணைய உள்ள பிரபல சினிமா நடிகை - ரசிகர்கள் ஆவல்!

பூவே உனக்காக சீரியலில் இணைய உள்ள பிரபல சினிமா நடிகை - ரசிகர்கள் ஆவல்!

சாயா சிங்

சாயா சிங்

2011-ல் சன் டிவி-யில் நாகம்மா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலுமே பிசியாக இருக்கும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

  • Share this:
தமிழ் சேனல்களில் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பது சீரியல்கள் தான். ரியாலிட்டி ஷோக்கள் ஒரு பக்கம் சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தினாலும் , மீதி நேரங்களில் சேனல்களுக்கு துணை நிற்பவை சீரியல்களே. பிரபல முன்னணி தமிழ் செயலக உலக தமிழர்களிடையே புகழ் பெற்றிருக்கும் சன் டிவி-யில் காலை 8.30 மணியிலிருந்து இரவு வரை நிறைய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் பிரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களின் அமோக ஆதரவு உள்ளது.

சன் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பூவே உனக்காக. இந்த சீரியலில் தற்போது பூவரசி கேரக்டரில் ஹீரோயினாக நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கதிரவன் என்றார் கேரக்டரில் பிரபல சின்னத்திரை நடிகர் அசீம் நடித்து வருகிறார். கடந்த வருடம் ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. நாயகி பூவரசி தற்போது மிக பெரிய சிக்கலில் இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனைவி பூவரசியை நாயகன் கதிர் காப்பாற்றுவது எப்படி என்கிற வகையில் சீரியல் மிகவும் பரபரப்பான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பூவே உனக்காக சீரியலை மேலும் சுவாரசியமாக்க பெண் சினிமா பிரபலம் ஒருவர் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல நம்மை எல்லாம் தன் ஆட்டத்தால் சுண்டியிழுத்த வெள்ளித்திரை நடிகை சாயா சிங் தான். இவருக்கு சின்னத்திரை புதிதல்ல. திருடா திருடியில் மன்மத ராசா பாடல் மூலம் பிரபலமான நடிகை சாயா சிங் அதின் பிறகும் சில குத்துப் பாடல்களில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

2011-ல் சன் டிவி-யில் நாகம்மா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலுமே பிசியாக இருக்கும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். பிரபல சீரியல் நடிகர் கிருஷ்ணாவை (தெய்வமகள் புகழ் பிரகாஷ்) கடந்த 2012-ல் திருமணம் செய்து கொண்டார்.

Also read... ’அன்பு அண்ணன்களுக்கு நன்றி’ ஈரமான ரோஜாவே அழகரின் நெகிழ்ச்சிப் பதிவு!

சன் டிவி-யில் ஒளிபரப்பான ரன் சீரியலில் கணவர் கிருஷ்ணாவிற்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை சாயா சிங், தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் தான் பூவே உனக்காக சீரியலில் புதிதாக இணைந்துள்ளதை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் இந்த சீரியலில் அவர் என்ன கேரக்டர் ரோலில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. ஏற்கனவே செம விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் பூவே உனக்காக, சாயா சிங்கின் என்ட்ரியால் மேலும் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துமாறு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: