The Family Man 2 : தமிழகத்தின் கடும் எதிர்ப்புகளை மீறி அமேசானில் வெளியானது தி ஃபேமிலிமேன் தொடர்

தி ஃபேமிலி மேன் 2

தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளை மீறி தி ஃபேமிலி மேன் தொடரின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

  • Share this:
    அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியான தொடர் தி பேமிலி மேன் வெப் சீரிஸ். 2019-ல் வெளியான இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். The Family Man தொடர் என்பது தேசியப் புலனாய்வு முகமையில் அச்சுறுத்தல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு அணியில் பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் சாகசங்களைச் சொல்லும் கதை.

    முதல் சீஸனில் ஐஎஸ்ஐஎஎஸ் குழுவால் தூண்டப்பட்ட இஸ்லாமியவாத தீவிரவாத தாக்குதல்களை ஸ்ரீகாந்த் திவாரியின் அணி முறியடிப்பதாகக் காட்டப்படும். மற்றொரு பக்கம், ஸ்ரீகாந்தின் குடும்ப வாழ்க்கை மோசமடைந்து கொண்டே போவது குறித்த காட்சிகளும் இடம்பெற்றன. ஸ்ரீகாந்தாக மனோஜ் பாஜ்பாயும் அவரது மனைவி சுசித்ராவாக பிரியாமணியும் நடித்திருந்தனர். இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் சண்டைகள், டெல்லியில் தீவிரவாதிகள் விஷ வாயு தாக்குதல் நடத்தப்படுவது போல காட்சிகள் இருக்கும். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது.

    அமேசான் ப்ரைமில் வெளியான இந்த தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்த சீஸன் எப்போது என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இரண்டாவது சீஸன் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீஸனுக்கான ட்ரெய்லர் மே 20-ம் தேதி வெளியானது. இந்த இரண்டாவது சீசனின் கதைக் களம் சென்னையில் நடைபெறுவதுபோல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கமாக சித்தரித்து அவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது சித்தரிக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தொடரில் சமந்தா விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக நடித்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் தொடர் வெளியிடப்படுவதைத் தடை செய்யவேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, ஃபேமிலி மேன் தொடரைத் தடை செய்யவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசு கடிதம் அனுப்பப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையில், ஃபேமிலி மேன் தொடரில் தமிழர்கை இழிவுபடுத்தவில்லை என்று அந்த தொடரின் குழு விளக்கம் அளித்தது. இந்தநிலையில், கடுமையான எதிர்ப்புகளை மீறி ஃபேமிலிமேன் தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் பாகம் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியானது. ஆனால் எதிர்ப்பு காரணமாக தற்போது இரண்டாம் பாகம் இந்தியில் மட்டும் வெளியாகியுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: