• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல பாடகர் பெயரில் பெண்களிடம் மோசடி செய்தவர் கைது!

பிரபல பாடகர் பெயரில் பெண்களிடம் மோசடி செய்தவர் கைது!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சமூக வலைதளத்தில் பிரபல பாடகர் பெயரில் செயல்பட்டு பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

    இந்தியில் பிரபல பாடகராக வலம் வருபவர் அர்மான் மாலிக். தமிழில் ஜீவா நடித்த கவலை வேண்டாம் என்ற படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்தி மட்டுமல்லாது தெலுங்கு மொழிப்பாடல்களையும் பாடியுள்ளார். இவரது பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கத்தை துவங்கியுள்ளார் உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த மகேந்திர வர்மன்.

    அந்த ஃபேஸ்புக் கணக்குகளின் மூலம் பல பெண்களிடம் நட்பைத் தொடர்ந்த மகேந்திரவர்மன் தன்னை அர்மான் மாலிக் என்றே கூறி வந்துள்ளார்.

    மேலும், தன்னிடம் பழகிய பெண்களிடம் கவர்ச்சியான தனிப்பட்ட புகைப்படங்களையும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக பெற்றுள்ளார். ஒருகட்டத்தில் தான் கேட்கும் நகை, பணம் ஆகியவற்றை கொடுக்காவிட்டால் அந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோவை குற்றப்பிரிவு போலீசார் மகேந்திரவர்மனை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீடியோ பார்க்க: கவுண்டமணி வாழ்க்கைக் கதை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: