' கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் நடிக்கிறேன்' - பகத் பாசில்

பகத் பாசில்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'விக்ரம்' படத்தில் நடிக்கவுள்ளதாக பகத் பாசில் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஆரம்பிக்கலாங்களா? என கமலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்தார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் 'விக்ரம்' படத்தின் முன் தயாரிப்பில் தற்போது பணியாற்றி வரும் லோகேஷ் கனகராஜ், கோவிட் தொற்றில் இருந்து மீண்டு வந்து நேற்றைய தினம் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தார்.

  இதற்கு முன்னதாக விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. கதை அவருக்கு பிடித்துள்ளதால், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

   

      

  இந்நிலையில் வில்லன் யார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கவுள்ளதாக இணையதள ஊடகமொன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  நடிகர் லாரன்ஸ் தற்போது ‘ருத்ரன்’ படத்தில் பிஸியாக உள்ளார். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை, ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்குகிறார். அதோடு லாரன்ஸ் தீவிர ரஜினி ரசிகர் என அனைவருக்கும் தெரியும், இந்நிலையில் அவர் கமலுடன் இணைந்தால் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பகத் பாசில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

     எனினும் படக்குழு இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: