பகத் பாசிலுக்கே சவாலாக அமைந்த படம் எது தெரியுமா?

ஃபகத் பாசில்

பகத் பாசில் இதுவரை நான் நடித்தப் படங்களிலேயே மிகவும் சிரமப்பட்டு நடித்தப் படம்" எது என்று கூறியுள்ளார்.

 • Share this:
  பகத் பாசில் இந்தியாவில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த நடிகர்களில் ஒருவர். மேக்கப்போ, மேனரிஸங்களோ இல்லாமல் ஒரு கேரக்டராக எப்படி மாறுகிறார் என்பது இன்னும் புதிராகவே உள்ளது. ஜோஜி அதற்கு சிறந்த உதாரணம். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா, தமிழில் கமலுடன் விக்ரம் என்று எல்லைகளை கடந்து நடித்து வரும் பகத் பாசிலுக்கே ஒரு படம் தண்ணிக் காட்டியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

  வரும் 15 ஆம் தேதி பகத் பாசில் நடித்துள்ள மாலிக் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. திரையரங்குக்கு என்று பிரமாண்டமாக தயாரான படம், ஊரடங்கு காரணமாக ஓடிடியில் வெளியாகிறது. "இந்தப் படம்தான் இதுவரை நான் நடித்தப் படங்களிலேயே மிகவும் சிரமப்பட்டு நடித்தப் படம்" என்று பகத் பாசில் கூறியுள்ளார்.

  Photos: பார்த்தவுடன் சொக்க வைக்கும் நடிகை இலியானாவின் பிகினி புகைப்படங்கள்..

  இந்தப் படத்தில் பகத் பாசில் நடித்துள்ள மாலிக் கதாபாத்திரத்தின் முப்பது வருட வாழ்க்கை காட்டப்படுகிறது. ஒவ்வொரு வயதுக்கேற்ப உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் செய்து அதற்கேற்ப உடல்மொழியையும் மாற்றி நடிக்க வேண்டி இருந்திருக்கிறது. இதுவரை நடித்த வேடங்களில் இதுவே சவாலானதாக இருந்தது என்று பகத் கூறியுள்ளார்.

  பகத் நடித்துள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் முடிவடைந்துள்ள நிலையில், லோகேஷ் கனகராஜின் விக்ரம் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. அவர் இந்திப் படம் ஒன்றில் விரைவில்  நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: