ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

#MeToo சர்ச்சை: ஹவுஸ்ஃபுல்- 4 படத்திலிருந்து வெளியேறினார் நானா படேகர்!

#MeToo சர்ச்சை: ஹவுஸ்ஃபுல்- 4 படத்திலிருந்து வெளியேறினார் நானா படேகர்!

நானா படேகர்

நானா படேகர்

பாலியல் குற்றாச்சாட்டுகள் அதிகரித்த நிலையில் நடிகர் அக்ஸய் குமார் படத்தயாரிப்பை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நடிகர் நானா படேகர் ஹவுஸ் ஃபுல் 4 என்ற படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இயக்குநர் ஷாஜித் கான் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாக இருந்த இந்தப் படம் இயக்குநர் மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  உலகமெங்கும் பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்துள்ள பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.  எனக்கும் நேர்ந்துள்ளது என்பதை மீடூ (MeToo)என்ற  வகையில் பேசி வருகின்றர். தற்போது ’மீடு’ இந்தியாவிலும் வேகமாக பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

  தனுஸ்ரீ தத்தா ‘ஹார்ன் ஒகே ப்ளீஸ்’ படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சமீபத்தில் புகார் அளித்தார். மேலும் இந்தப்படத்தின் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமி சித்திக் மற்றும் இயக்குநர் ராகேஷ் சராங் ஆகியோர் மீது மும்பை காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் ஹவுஸ் ஃபுல் படத்தின் இயக்குநர் ஸாஜித் கான் மீது பெண் பத்திரிகையாளர் உட்பட 3 பேர் பாலியல் புகார் செய்துள்ளனர்.

  வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த அக்‌ஷய் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் பாலியல் சர்ச்சை குறித்த விசாரணைகள் நடந்து முடியும் வரை பட வேலைகள் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  அதன்படி தயாரிப்பு நிறுவனமும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இயக்குநர் ஷாஜித் கான் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மை விரைவில் வெளிவரும் என்று அதுவரை தன்னைப் பற்றி ஜட்ஜ்மெண்ட்டிற்கு யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Published by:Saroja
  First published:

  Tags: Akshay Kumar, House full 4, Nana Patekar, Sajid Khan, Sexual Harassment Allegations