• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Naam Iruvar Namakku Iruvar: ஜாமீனில் வந்த ’மாயன்’ - விறுவிறுப்பாக செல்லும் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல்!

Naam Iruvar Namakku Iruvar: ஜாமீனில் வந்த ’மாயன்’ - விறுவிறுப்பாக செல்லும் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல்!

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் அனைவராலும் வெறுக்கப்படும் முத்துராசு மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்வதால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே செல்கிறது.

தொடரில் அனைவராலும் வெறுக்கப்படும் முத்துராசு மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலை குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் மாயனை அழைத்துச் சென்று அடித்து விசாரிக்கின்றனர். ஆனால், தான் கொலை செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கும் மாயனை லாக்அப்பில் வைத்து அடிக்கின்றனர். அந்த நேரத்தில் வக்கீலுடன் காவல்நிலையத்துக்கு சென்ற மாயனின் மாமனார், மாயனை ஜாமீனில் எடுக்கிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாயன், மாமனார் முன் கண்கலங்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாயனை காவல்துறையினர் அடித்திருப்பதை பார்த்த கோப்பப்படும் அவரின் மாமனார், கேட்பதற்கு ஆள் இல்லை என நினைத்துக்கொண்டு அடிக்கிறீர்களா? எனவும் ஆவேசப்படுகிறார். அவரின் செயல்களை பார்த்து கண்ணீர் வடிக்கும் மாயன், நீங்கள் இல்லை என்றால் நடுரோட்டில் அனாதையாக, நாயாக திரிந்திருப்பேன் என கண்ணீர் வடிக்கிறார். பின்னர் வீட்டுக்கு செல்லும் அவரை, மனைவி மஹா கண்ணீருடன் வரவேற்கிறார்.

மாயனை பார்த்தவுடன் தேம்பி தேம்பி அழும் மஹா, கண்ணத்தில் கை வைத்து ஆரத் தழுவிக்கொள்கிறாள். பின்னர், மாயன் தந்தையாகப் போகும் தகவலை கூறுகிறாள். மாயனின் கைகளை தன் வயிற்றில் வைத்து, குழந்தை வளர்வதை மஹா கூறுகிறாள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் மாயனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கொரு பிரச்சனை என்றால் இனிமேல் என் மகன் கேட்பான் என மகிழ்ச்சியாக தெரிவிக்கிறான்.

இதற்கு இடையே காவல்நிலையத்துக்கு செல்லும் ஐஸ்வர்யா, முத்துராசை தான் கொன்றதாக வாக்குமூலம் அளிக்கிறார். அவரின் பேச்சை கேட்ட கமிஷ்னர் எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறார். துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை முத்துராசை சுட்டதாக ஐஸ்வர்யா தெரிவிக்கிறாள். மேலும், தன்னைக் காப்பாற்ற யாரோ திட்டமிட்டு இந்த வேலை செய்வதாகவும் கூறுகிறாள்.

Also read... Keerthy Suresh: உண்மையில் பெருமையாக இருக்கிறது - நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நன்றி சொன்ன ரேஷ்மா வெங்கடேஷ்!

அந்த நேரத்தில் காவல்நிலையத்துக்கு வேகமாக வரும் மாயன், ஏன் சார்? என் தங்கையை அழைத்து விசாரிக்கிறீர்கள்? அவளுக்கும் கொலைக்கும் சம்பந்தமில்லை எனக் கூறுகிறான். ஆனால், கமிஷ்னரோ, நாங்கள் அழைக்கவில்லை, அவராகவே வந்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்கிறாள், என்ன நாடகமாடுகிறீர்களா? என கேட்கிறார். மேலும். இந்த கொலை செய்ததை ஒப்புக்கொள்ளுமாறும் மாயனை மிரட்டுகிறார்.

கமிஷ்னரின் மிரட்டலுக்கு பயப்படாத மாயன், தானும் கொலை செய்யவில்லை, தங்கை ஐஸ்வர்யாவும் கொலை செய்யவில்லை என தீர்க்கமாக கூறுகிறார். பின்னர் யார் முத்துராசுவைக் கொலை செய்தது? என கமிஷ்னர் கேள்வி எழுப்புகிறார். பரபரப்பாக செல்லும் காட்சிகள் மற்றும் அடுத்தடுத்த திருப்பங்களால் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் கதைக்களம் ஜெட் வேகத்தில் நகர்கிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: