முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அக்வாமேன் படத்தில் நீர்மனிதனாக நடிக்கும் ஜேசனுக்கு மெழுகுச்சிலை!

அக்வாமேன் படத்தில் நீர்மனிதனாக நடிக்கும் ஜேசனுக்கு மெழுகுச்சிலை!

அக்குவா மேன் மெழுகுச்சிலை

அக்குவா மேன் மெழுகுச்சிலை

ஹாலிவுட் படமான அக்வாமானில் நடித்துள்ள ஜேசன் மொமோவாவின் மெழுகுச்சிலையை பிரபல நிறுவனமான மேடம் டுசாட்ஸ் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

ஹாலிவுட் படமான அக்வாமேனில் நடித்துள்ள ஜேசன் மொமோவாவின் மெழுகுச் சிலையை பிரபல நிறுவனமான மேடம் டுசாட்ஸ் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.

ஹாலிவுட் நடிகரான ஜேசன் மொமோவா நடித்திருக்கும் அக்வாமேன் திரைப்படம் அடுத்த மாதம் 21-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. வார்னர் ப்ரொஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்நிலையில் மேடம் டுசாட்ஸ் நிறுவனம் அக்வாமான் படத்தில் நீர்மனிதனாக நடிக்கும் ஜேசனின் மெழுகுச்சிலையை அறிமுகம் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மஞ்சள் மற்றும் கறுப்பு நிற உடை அணிந்து கையில் வேலுடன் ஜேசன் மொமோவா நிற்கும் தோற்றத்தில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது, டிசம்பர் 4-ம் தேதி அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்தச் சிலை நிறுவப்படவுள்ளது.

ஜேசன் மொமோவா, ஜஸ்டிஸ் லீக்கூ, ப்ராவென் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Aquaman, Wax statue