ENJOY ENJAAMI ARIVU INTRODUCE VALLIAMMA GRANDMA VIRAL VIDEO SKV
Enjoy Enjaami : என்ஜாய் எஞ்சாமி வள்ளியம்மா பாட்டி இவங்கதான்! அறிவின் கவனம் பெரும் பதிவு!
என்ஜாய் எஞ்சாமி பாடல்
சமீபத்தில் இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாக என்ஜாய் எஞ்சாமி பாடலின் பாடகர் அறிவு தற்போது அந்த பாடலின் வரியில் இடம்பெற்ற வள்ளியம்மா பாட்டியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள், என பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டு அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டனர். இதனிடையே பாடகர் தெருக்குரல் அறிவும் தான் வாக்களித்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் மட்டும் அல்லாது மக்கள் மனதிலும் வென்ற பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடலின் வரியில் இடம்பெற்ற வள்ளியம்மா பாட்டியை தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ரவுடி பேபி பாடல் மூலம் பிரபலமானவர் பின்னணி பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மகளான இவர் பாடகர் அறிவுடன் இணைந்து என்ஜாய் எஞ்சாமி என்ற சுயாதீன பாடலை பாடியுள்ளார்.
சுயாதீன கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் தயாரித்திருக்கும் இந்தப் பாடலை அமித் கிருஷ்ணன் படமாக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த பாடலை பார்வையிட்ட பலரும் என்ன ஒரு உணர்வு பூர்வமான பாடல், கலை, கலாச்சாரம் மிகுந்த பாடல் என பாராட்டி வருகின்றனர்.