Home /News /entertainment /

மீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

மீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

  • 1 minute read
  • Last Updated :
    நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதனால் மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    தமிழகத்தைப் பொறுத்தவரை 37 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை மற்றும் பின்னடவை மாறி மாறி சந்தித்து வருகின்றனர்.

    திமுக, அதிமுக தவிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி. இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 3 மணி நிலவரப்படி 28638 வாக்குகளைப் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார். அத்தொகுதியில் தொடர்ந்து முதலிடத்தில் திமுக உள்ளது.



    மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் 13 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    தென்னிந்திய இயக்குநர்களை புறக்கணிக்கிறதா பாலிவுட் திரையுலகம்?

    First published:

    அடுத்த செய்தி