ஈஸ்வரன் திரைப்படம் 14ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படம் அதே நாள் ஓடிடியில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்தது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்று முடிவு செய்தனர். உடனடியாக ஓடிடியில் வெளியிடும் முடிவை தயாரிப்பாளர்கள் கைவிட்டனர்.
அதேசமயம் சிலம்பரசன் நடிப்பில் உருவான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சிலம்பரசன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இதைக் காரணம் காட்டி டிஜிட்டல் நிறுவனங்களிடம் படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு நடிகர்கள் என்றுமே பொறுப்பு ஏற்க மாட்டார்கள் என்று பேசிய டி.ராஜேந்தர் மாஸ்டருக்கு முன் ஈஸ்வரன் வெளியாகி விடக் கூடாது என்பதனால் பலர் இவ்வாறாக சேர்ந்து சதி செய்வதாக பேசியுள்ளார்.
நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாலும் என் பிள்ளையின் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக தற்போது வெளிவந்து இருக்கிறேன் என்று கண்ணீர் ததும்ப பேசிய டி.ராஜேந்தர் பலர் துரோகம் செய்வதாகவும் குறிப்பிட்டார். சிவாஜி நடிப்பில் உருவான ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாய் பாடலையும் சிம்பு விற்காக பாடிக் காட்டிய டி.ராஜேந்தர் இருவரும் மிகவும் சிரமப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: கமல்ஹாசன் இல்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க முடிவு?
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் முரளியை எதிர்த்து போட்டியிட்டதன் காரணமாகவும் நடிகர் விஷாலை எதிர்த்து சிலம்பரசன் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடதன் காரணமாகவும் இவ்வாறான சதி வேலைகள் நடப்பதாக குறிப்பிட்ட டி.ஆர் வேறு யாரையோ வாழ வைப்பதற்காக கழுத்தறுப்பு வேலைகளில் திரைத்துறையில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eeswaran Movie, Master