நீ அழிக்க வந்த அசுரன்னா.. நான் காக்க வந்த ஈஸ்வரன் டா.. வெளியானது ஈஸ்வரன் படத்தின் ட்ரைலர்..

Youtube Video

Eeswaran Official Trailer | ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

  • Share this:
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.சமீபத்தில் ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதையடுத்து ஈஸ்வரன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கொரோனா லாக்டவுன் தளர்த்தப்பட்ட காலத்தில் ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 28 நாட்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைப்பெற்றது. அதையடுத்து உடனே படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் முடிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் நிலையில், ஜனவரி 14 ஆம் தேதி ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது சிம்பு மற்றும் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.படத்தின் ட்ரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருக்கும் நிலையில்,தற்போது ஈஸ்வரன் படத்தின் ட்ரைலர் வெளியாகிவுள்ளது.அதில் ‘நீ அழிக்குறதுக்காக வந்த அசுரன்னா, நான் காக்குறத்துக்காக வந்துருக்க ஈஸ்வரன் டா’ என்று சிம்பு சொல்லும் டையலாக் மாஸாக உள்ளது.

 

 

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்...
Published by:Tamilmalar Natarajan
First published: