இயக்குநர் சுசீந்திரனின் தாயார் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்

இயக்குநர் சுசீந்திரன்

பிரபல இயக்குநர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 62.

  • Share this:
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். விஷ்ணு விஷால், பரோட்டா சூரி ஆகிய முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார்கள். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வசூலைக் குவித்து வெற்றியடைந்தது.

அதைத்தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’ திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் தேசிய விருதைப் பெற்ற இயக்குநர் சுசீந்திரன் அடுத்தடுத்து ஜீவா, பாண்டிய நாடு, மாவீரன் கிட்டு, ஜீனியஸ் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கினார்.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இயக்குநர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி உயிரிழந்துள்ளார். 62 வயதாகும் அவருக்கு மாரடைப்பு ஏற்படவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 11 மணியளவில் காலமானார். சுசீந்திரனின் தந்தை பெயர் நல்லுசாமி. சுசீந்திரனுக்கு உடன் பிறந்தவர்களாக இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி இருக்கிறார்.இந்நிலையில் தாயார் ஜெயலட்சுமி மரணம் சுசீந்திரனின் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையினரும், அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இன்று மாலை ஜெயலட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: