பாம்பைக் கொடுமைப்படுத்தினாரா சிம்பு? வனத்துறையில் புகார்

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை மீறியிருப்பதாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் புகாரளித்துள்ளனர்.

  • Share this:
சிம்புவின் 46-வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை படமாக்கி வரும் படக்குழு ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில், உண்மையாகவே உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் சிலம்பரசன் போடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் பாம்புகள் அனைத்தும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாகும். சிம்பு பிடித்த பாம்பு வன உயிரின பாதுக்காப்பு சட்டத்தின் பட்டியல் 2ல் பிரிவு 2ல் இடம்பெற்றுள்ளது. இச்சட்ட்த்தின் கீழ் பாதுகாப்பட்ட உயிரினத்தை வைத்து படம் பிடிப்பது குற்றமாகும்.பொதுவாக பாம்புகளை சினிமாவில் பயன்படுத்தும்போது அதன் பல் பிடுங்கப்பட்டிருக்கும் அல்லது வாய் ஒட்டப்பட்டிருக்கும்.

இப்படி வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் சிம்பு  வன உயிரின பாதுகாப்பு  சட்டத்தை மீறியிருப்பதால் அவர் மீது உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: