முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / படப்பிடிப்புக்கு சரியாக செல்லாதது ஏன்? உண்மையை உடைத்த சிம்பு

படப்பிடிப்புக்கு சரியாக செல்லாதது ஏன்? உண்மையை உடைத்த சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

சில ஆண்டுகளாக தான் மனக் கஷ்டத்தில் இருந்ததாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’. கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தை திண்டுக்கல்லைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் குறுகிய காலத்தில் படமாக்கி முடித்துள்ளது படக்குழு.

இதையடுத்து தீபாவளிக்கு படத்தின் டீசர் வெளியிடப்பட்டு பொங்கலுக்கு ‘ஈஸ்வரன்’ திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, சிம்பு, நிதி அகர்வால், சுசீந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் சிம்பு, “அனைவருக்கும் இருக்கும் சந்தேகம். இவ்வளவு நாட்கள் நான் எப்படி இருந்தேன். திடீரென எப்படி மாறினேன். ஷூட்டிங் முடிந்தது எப்படி. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறதே. உண்மையில் எங்களுக்கும் அது தெரியவில்லை. அது தான் உண்மை. இறைவனுக்கு தான் தெரியும்.

லாக்டவுன் காலத்தில் ஜூம் காலில் தான் சுசீந்திரன் கதை சொன்னார். அந்தக் கதையைக் கேட்டவுடன் பாசிட்டிவிட்டி வந்தது. அதனால் தான் இந்தப் படத்தில் நடித்தேன். இந்தப் படத்தின் கதை தன்னப்பிக்கையை கொடுத்தது. மக்களுக்கும் நேர்மறை எண்ணத்தை ‘ஈஸ்வரன்’ கொடுக்கும்.

இப்போதெல்லாம் அதிகம் நெகட்டிவ்விட்டி இருக்கிறது. இது சரி. அது தவறு. போட்டி, பொறாமை, குறை சொல்வது என்னங்க இது. முதலில் நாம் அறிவுரை கூறுவதையும் மற்றவர்களிடம் அட்வைஸ் கேட்பதையும் நிறுத்துங்கள். சோஷியல் மீடியாவில் சொல்வதை எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

படமெடுப்பதே திரையரங்கிற்காக தான். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு சிலர்  வேறு தளங்களில் வெளியிடுகிறார்கள். அது அவர்களது விருப்பம். யாருடனும் சண்டையிட வேண்டாம். திரையரங்கிற்கு அனுமதி அளித்த அரசிற்கு நன்றி. இனி பேச ஒன்றுமில்லை; செயல் தான். அடுத்தடுத்து படங்கள் உள்ளது. இனி அன்பை வெளிப்படுத்த நினைக்கிறேன். இதற்காக சில விஷங்களை துவங்கவுள்ளேன். இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்லமுடியும், என்றார்.

நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டதற்கு காரணம் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அதனால் அதிக எடை போட்டேன். படப்பிடிப்புக்கு சரியாக செல்ல முடியவில்லை. வாழ்க்கையில் எதையும் சரியாக பண்ண முடியவில்லை. எல்லாமே பிரச்னையாகவே சென்று கொண்டிருந்தது. இறைவன் நமக்கு உள்ளே தான் இருக்கிறார். உள்ளே சரி செய்தேன். உள்ளே சரியானால் எல்லாம் சரியாகிவிடும். அடுத்ததாக மாநாடு, பத்து தல இன்னும் 3 படங்கள் இருக்கிறது. சுசீந்திரன் உடன் இன்னொரு படம் பணியாற்றுகிறேன். அது தீபாவளிக்கு வருகிறது” என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், “சிம்புவிற்கான நேரம் தொடங்கிவிட்டது. அடுத்த இரண்டாண்டில் இந்தியாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் சிம்பு இடம்பெறுவார். வருடத்திற்கு நான்கு படங்கள் வெளியாகும். அவர் உழைப்பதற்கு தயாராகி விட்டார். ரஜினி கமலுக்கு அடுத்து அதிக ஆண்டு அனுபவம் உள்ளவர் சிம்பு” என்றார்.

பாரதிராஜா பேசும்போது, “நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு; பேசி பழகிய சிம்பு வேறு. மிகவும் அற்புதமான திறமைசாலி. படப்பிடிப்பு நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிடுவார்”என்றார்.

தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்

First published:

Tags: Eeswaran Movie, Simbu