’அன்பு அண்ணன்களுக்கு நன்றி’ ஈரமான ரோஜாவே அழகரின் நெகிழ்ச்சிப் பதிவு!

பிரவீன் தேவசகாயம்

தன்னுடன் நடித்த சக நடிகர் நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

  • Share this:
’ஈரமான ரோஜாவே’ சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ள நிலையில், அந்த சீரியலில் அழகராக நடித்த பிரவீன் தேவசகாயம் இயக்குநர்கள், சக நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் ஆகஸ்ட் 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரப்போகிறது. ஏற்கனவே சூட்டிங்கை நிறைவு செய்த நாடகக் குழுவினர், ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சுமார் 800 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தை பிடித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சீரியலில் நடித்த சாய் காயத்திரி உள்ளிட்டோர் ரசிகர்கள் மத்தியிலும் கதாப்பாத்திரங்களாகவே அறியப்படுகின்றனர். பிரவீன் தேவசகாயம், இந்த சீரியில் அழகராக சூப்பர் ஆக்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார். ஈரமான ரோஜாவே சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஈரமான ரோஜாவே எனக்கு ஒரு பள்ளிக்கூடம்.

அழகர் எனும் ஒரு கதாப்பாத்திரத்தைக் படைத்த என் அன்பு அண்ணன் மாண்புமிகு திரு சந்துரு துரையப்பா அண்ணன் அவர்களுக்கும், செந்தில் மோகன் அண்ணன் அவர்களுக்கும் அழகரின் பனிவான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by PRD (@praveendevasagayam)


மேலும், தன்னுடன் நடித்த சக நடிகர் நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார். ‘என்னுடைய டார்லிங்ஸ் பவித்ரா ஜனனி, திரவியம், அர்ச்சனா, ஷ்யாம், ரம்யா, குமரமூர்த்தி, குமரன், சாய் காயத்திரி உள்ளிட்டோருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். கடைசியாக தன்னுடைய நடிப்புக்கு அங்கீகாரம் கொடுத்து ரசித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி மக்களே என பிரவீன் கூறியுள்ளார். ஏதேனும் விடுபட்டு இருந்தால் அதற்கு மன்னிப்புகோரியுள்ள பிரவீன் தேவசகாயம், ‘ஈரமான ரோஜாவே’ மலரும் நினைவுகள் என முடித்துள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு பலரும் தங்களின் லைக்குகளை கொடுத்துள்ளனர்.

Also read... திடீரென நிறுத்தப்பட்ட ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை சீரியல் - ஏன் தெரியுமா?

ஈரமான ரோஜாவே சீரியல் முடிவுக்கு வருவது குறித்த தகவல் ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு பரவியது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சாய் காய்த்திரி பதிவிட்ட புகைப்படங்களின் மூலம் ரசிகர்கள் உறுதி செய்தனர். பிடித்த மற்றும் மனத்துக்கு நெருக்கமான ஒரு தொடர் முடிவுக்கு வருவது, ரசிகர்களிடையே நீங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலில் புகழ் - அகிலாவுக்கு இடையே ஓடிக்கொண்டிருந்த காதல் அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்டது. ஓவர் ஆக்டிங் இல்லாமல் இயல்பான காதலையும், சண்டையையும் வெளிப்படுத்தினர். அவர்களின் ரொமான்ஸை ரசித்த இளைஞர்களுக்கு, ஈரமான ரோஜாவே சீரியல் முடிவுக்கு வருவது நிச்சயமாக ஏமாற்றத்தைக் கொடுக்கும்.
Published by:Vinothini Aandisamy
First published: