மோசமாக கார் ஓட்டி, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீஸ் வழக்குப்பதிவு

yashika aanand

விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி என்பவர் படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  • Share this:
கிழக்கு கடற்கரை சாலையில் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துக்கு காரணமாக இருந்ததாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் (வயது 21). டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்த யாஷிகா ஆனந்த், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படமான நோட்டா மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் கவலை வேண்டாம், மணியார் குடும்பம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

Also Read:   மாப்பிள்ளையின் நண்பர்கள் கொடுத்த கிஃப்டை கடுப்பில் தூக்கி வீசிய மணப்பெண்.

பின்னர் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

yashika aanand


இதனிடையே நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நேற்றிரவு 11.45 மணியளவில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற டாடா ஹேரியர் கார், நிலைதடுமாறி செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி என்பவர் படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Also Read:    மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மோசமாக கார் ஓட்டி, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். அதிவேகமாக கார் ஓட்டியது, விபத்துக்குள்ளாக்கியது, உயிரிழப்பு ஏற்படுத்தியது 279, 337, 304 என மூன்று பிரிவின்ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்த பவானிதேவியின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தகவல் சினிமா வட்டாரத்தினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செய்தியாளர் ராபர்ட், மாமல்லபுரம்
Published by:Arun
First published: