முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / துணிவு, வாரிசு படங்களின் அதிகாலை காட்சிகள் ரத்து - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

துணிவு, வாரிசு படங்களின் அதிகாலை காட்சிகள் ரத்து - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

Varisu and Thunivu: துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கான ஸ்பெஷன் ஷோவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியிடப்படுகிறது. இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பதால் வரும் பொங்கல் தியேட்டர்களில் களைகட்டும் என்றே தெரிகிறது. தற்போது முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு படங்கள் பொங்கலுக்கு வருவதற்குள் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அளவிட முடியாத வகையில் சென்று கொண்டிருக்கிறது. ஒருபக்கம் தியேட்டர்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. மறுபக்கம் ரசிகர்கள் கோயில் கோயிலாக படியேறி வருகின்றனர். இந்நிலையில் துணிவு வாரிசு படங்களுக்கான அதிகாலை காட்சிகளை தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி  ஷோக்களுக்கு அனுமதி இல்லை என  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

First published:

Tags: Thunivu, Varisu