காதலியைக் கரம்பிடித்தார் ‘தி ராக்’ ட்வைன் ஜான்சன்...ஹவாய் தீவில் கோலாகலக் கொண்டாட்டம்

ராக்- லாரென் தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Web Desk | news18
Updated: August 20, 2019, 12:45 PM IST
காதலியைக் கரம்பிடித்தார் ‘தி ராக்’ ட்வைன் ஜான்சன்...ஹவாய் தீவில் கோலாகலக் கொண்டாட்டம்
ராக் திருமணம்
Web Desk | news18
Updated: August 20, 2019, 12:45 PM IST
தனது நீண்ட கால காதலி லாரென் ஹசியானை பிரபல ஹாலிவுட் பிரபலம் ‘தி ராக்’ ட்வைன் ஜான்சன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மல்யுத்த வீரரான ராக், தற்போது ஹாலிவுட் நடிகராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 47 வயதான ராக் தனது காதலி லாரென் என்பவரை ஹவாய் தீவில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். ராக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

ராக் மற்றும் லாரென் இருவரும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் குறித்து ராக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கும் வரையில் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்துள்ளது. ராக்- லாரென் தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

Loading...

View this post on Instagram
 

We do. August 18th, 2019. Hawaii. Pōmaikaʻi (blessed) @laurenhashianofficial❤️ @hhgarcia41📸


A post shared by therock (@therock) on


ராக் ட்வைன்-க்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். தனது முதல் மனைவி டேனி கிரேஸியாவை கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார் ராக். இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மேலும் பார்க்க: தனுசுடன் மோதலா? மனம் திறக்கும் ஜி.வி.பிரகாஷ்
First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...