• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Dulquer Salmaan ரம்ஜான் ஸ்பெஷல்: மகளின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட துல்கர் சல்மான்!

Dulquer Salmaan ரம்ஜான் ஸ்பெஷல்: மகளின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

ரம்ஜான் கொண்டாட்டத்தையொட்டி ரசிகர்களுக்காக மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை துல்கர் சல்மான் வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.

  • Share this:
மலையாள திரைப்பட உலகுக்கு இணையாக தமிழ்நாட்டிலும் துல்கர் சல்மானுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள அவர், நிகழ்கால சாக்லெட் பாயாக இருந்து வருகிறார். அவரின் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் தேடிக்கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு ரம்ஜான் கிப்ட் ஒன்றை கொடுத்து குதூகலப்படுத்தியுள்ளார்.

தனது மகள் மரியா மற்றும் அபில் சுபியா ஆகியோருடன் இருக்கும் கியூட் புகைப்படத்தை ரம்ஜான் ஸ்பெஷலாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய மரியாவுக்கு, அப்போது தவறவிட்ட ரசிகர்கள் இப்போது பிறந்தநாள் வாழ்த்தையையும், ரம்ஜான் வாழ்த்துடன் சேர்த்து வாழ்த்தி வருகின்றனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் சில மணி நேரங்களில் 15 லட்சத்துக்கும் மேலான லைக்குளை கடந்துள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர், வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய அசாத்திய நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். கதை தேர்வு, இயல்பான நடிப்பு, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இருக்கும் அவரின் படம் என அனைத்தும் துல்கரை வெகுசீக்கரமே முன்னணி நடிகராக உயர்த்தியது.

ALSO READ : ஆண்பாவம் படம்போல 6 வயது சிறுவனின் தலையில் மாட்டிக்கொண்ட ஸ்டீல்குடம் - 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வெட்டி எடுப்பு

2012ம் ஆண்டு 'செகண்ட் ஷோ' திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகுக்குள் காலடி எடுத்து வைத்தார். 'சார்லி, சலலாஹ் மொபிலஸ், உஸ்தாத் ஹோட்டல்' உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக அவர் நடித்த அனைத்தும் படங்களை வெற்றி வாகை சூடியது.

மலையாளம் தெரியாதவர்களும் துல்கருக்காக அவரது படத்தை தேடிப் பார்க்க ஆரம்பித்த நிலையில், 'வாயை மூடி பேசவும்' படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். இந்த படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பையும், துல்கருக்கு நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது.

பின்னர் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் 'ஓ காதல் கண்மணி' படத்தில் நடித்தார். இளம் ரசிகர்கள் ஓ காதல் கண்மணி படத்தை விரும்பி பார்த்தனர். இதனையடுத்து, இயக்குநர் தேசிங் பெரியசாமியின் கைவண்ணத்தில் உருவான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்தார்.

 

 



 




View this post on Instagram





 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)






 

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருக்கும் ரக்ஷன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். துல்கர் சல்மானுக்கு தமிழ் திரைப்பட துறையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் அவர் சென்றடைந்தார். அவரின் அடுத்த தமிழ் படம் எப்போது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

ALSO READ : இன்ஸ்டாகிராமை கலக்கும் பிராச்சியின் நடனம் - பிரித்திவி ஷாவின் காதலியா?

தற்போது பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் 'ஹே சினாமிஹா' படத்தில் நடித்து வருகிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தப் படத்தின் தமிழ் பாடல் ஒன்றை பாடியுள்ள அவர், பாடகராகவும் அறிமுகமாக உள்ளார். காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டோரும் துல்கருடன் நடிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: