முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஹே! சினாமிகா பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு!

ஹே! சினாமிகா பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு!

Dulquer Salmaan | குருப் படத்தில் கிரிமினலாகவும், வரவிருக்கிற சல்யூட் படத்தில் போலீசாகவும் முரட்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் துல்கர் சல்மான், ஹே! சினாமிகாவில் முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 • Last Updated :

  துல்கர் சல்மான் நடித்திருக்கும் தமிழ்ப் படமான ஹே! சினாமிகாவின் பர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது.

  இந்தப் படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கியுள்ளார். இவர் கமலின் நம்மவர் படத்தில் நாகேஷின் மகளாக நடித்தவர். ஏராளமான படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இயக்குனராக இவரது முதல் படம் ஹே! சினாமிகா.

  இந்தப் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது, துல்கர் சல்மான் நாயகன். குருப் படத்தில் கிரிமினலாகவும், வரவிருக்கிற சல்யூட் படத்தில் போலீசாகவும் முரட்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் ஹே! சினாமிகாவில் முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் இவர் ரேடியோ ஜாக்கியாக வருகிறார். இளமை துள்ளும் கதாபாத்திரம்.

  இவரது ஜோடியாக அதிதி ராவ் நடித்துள்ளார். இருவரும் கணவன், மனைவியாக இதில் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகான இவர்களின் உறவும், ஒரு பெண் அந்த உறவில் நுழையும் போது ஏற்படும் பிரச்சனைகளும் தான் கதை. அந்த மூன்றாவது பெண்ணாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ரொம்பவும் கம்பீரமான வேடம் காஜல் அகர்வாலுக்கு என பிருந்தா கூறியுள்ளார்.

  மேலும் படிக்க - பரம்பரை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ’நான் ஈ’ நடிகை ஹம்சா நந்தினி

  இன்று காலை ஹே! சினாமிகாவின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அத்துடன் படம் 2022 பிப்ரவரி-25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: