முன் பணத்துடன் மன்னிப்புக் கடிதம்... டப்பிங் யூனியனில் சின்மயி மீண்டும் சேர நிபந்தனை

பாடகி சின்மயி

  • News18
  • Last Updated :
  • Share this:
பின்னணி பாடகி சின்மயி விரும்பினால் மீண்டும் டப்பிங் சங்கத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று டப்பிங் சங்க நிர்வாக குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து டப்பிங் சங்க நிர்வாகக் குழு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்திருப்பதாவது,

“பாடகி சின்மயியை வேண்டுமென்றே சங்கத்திலிருந்து நீக்கி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

டப்பிங் சங்க விதிகளின்படி வருடத்துக்கு ஒரு முறை சந்தா செலுத்தி தங்களது உறுப்பினர் பதிவு எண்ணை புதுபித்துக் கொள்ள வேண்டும். இது அனைத்து உறுப்பினரகளுக்கும் பொருந்தும். பாடகி சின்மயி சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை.



இதுகுறித்து அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் எந்தப் பதிலும் தெரிவிக்காததால் அவர் நீக்கப்பட்டார். அவரை நீக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. அவர் மீண்டும் சங்கத்தில் சேர விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம். ஆனால், அவர் மீண்டும் புதிய உறுப்பினராக மட்டுமே சேர்ந்து கொள்ள முடியும். ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்புக் கடிதம் கொடுத்து, புது உறுப்பினர் படிவம் கொடித்தால் பாடகி சின்மயியை மீண்டும் டப்பிங் சங்கத்தில் புதிய உறுப்பினராக சேர்த்துக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.

வெற்றிகளைக் குவிக்க உதவிய தென்னிந்திய கலாசாரம் - தோனி - வீடியோ

Published by:Sheik Hanifah
First published: