குடிபோதையில் மோசமான வார்த்தைகளில் பேசும் நடிகர் சஞ்சய் தத் - வைரல் வீடியோ

ரன்பீர் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ரூ.300 கோடி அளவுக்கு வசூலை குவித்தது.

news18
Updated: November 10, 2018, 7:12 PM IST
குடிபோதையில் மோசமான வார்த்தைகளில் பேசும் நடிகர் சஞ்சய் தத் - வைரல் வீடியோ
சஞ்சய் தத்
news18
Updated: November 10, 2018, 7:12 PM IST
தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது வீட்டில் பார்ட்டி நடத்திய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அங்கிருந்த பத்திரிகையாளர்களை மோசமான வார்த்தைகளில் பேசும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நன்னடத்தை காரணமாக தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுவிக்கப்பட்டார். சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி ரூ.300 கோடி வசூலை குவித்தது.

தீபாவளி பண்டியையை ஒட்டி சஞ்சத் தத், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வீட்டில் பார்ட்டி நடத்தினார். அப்போது, வீட்டின் வெளியே குவிந்திருந்த பத்திரிகையாளர்களை தகாத வார்த்தைகளால் அவர் விமர்சித்தார். குடிபோதையில் இருந்த சஞ்சய் தத், பத்திரிகையாளர்களைப் பார்த்து, போய் உங்களது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடுங்கள் என்று காரசாரமாக கூறினார்.
Loading...எங்களது பாஸ்களின் உத்தரவின்பேரில் வேலைதான் செய்கிறோம் என அவர்களில் சிலர் பதிலளித்தனர். எனினும், மோசமாக சில வார்த்தைகளை அவர் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Also See..

First published: November 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...