முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / போதைப் பொருள் குற்றச்சாட்டு: நிக்கி கல்ராணி சகோதரி வீட்டில் போலீசார் சோதனை

போதைப் பொருள் குற்றச்சாட்டு: நிக்கி கல்ராணி சகோதரி வீட்டில் போலீசார் சோதனை

நடிகை நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணி

போதை பொருள் குற்றச்சாட்டில் கன்னட நடிகை ராகிணியை தொடர்ந்து நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா வீட்டில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கன்னட திரையுலகில் போதை மருந்து புழக்கம் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனடிப்படையில் கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

மேலும், அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நடிகை ராகிணியை போலீசார் கைதுசெய்தனர். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நிக்கி கல்ராணியின் சகோதரியும், நடிகையுமான சஞ்சனா வீட்டில் போலீசார் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர். சஞ்சானா போதை மருந்து உட்கொண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

First published:

Tags: Nikki Galrani