நடிகை ரியா சக்ரவர்த்தி தொடர்பான போதைப்பொருள் வழக்கு.. விசாரணை வளையத்தில் தமிழ் நடிகை

நடிகை ரியா சக்ரவர்த்தி தொடர்பான போதைப்பொருள் வழக்கு.. விசாரணை வளையத்தில் தமிழ் நடிகை

ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங், பாலிவுட் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோரின் பெயர்களையும் ரியா அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது.

 • Share this:
  போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவினரின் விசாரணையில் நடிகை ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட 25 பிரபலங்களின் பெயர்களை நடிகை ரியா சக்ரபர்த்தி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளும் இந்த வழக்கில் சிபிஐயுடன் சேர்ந்து நடிகை ரியா சக்ரபர்த்தியிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையின் போது இந்தியா முழுக்க உள்ள 25 பிரபலங்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக பட்டியல் ஒன்றை ரியா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தீரன் அதிகாரம், என்ஜிகே, தேவ் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ரகுல் பிரீத் சிங், பாலிவுட் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோரின் பெயர்களையும் ரியா அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இதனிடையே போதை மருந்து விவகாரத்தில் கைதாகியுள்ள கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர், விசாரணைக்கு முன் மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்றனர். எதற்காக ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: