• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விலையுயர்ந்த கார் வாங்கிய ரசிகர்... வித்தியாசமாக வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

விலையுயர்ந்த கார் வாங்கிய ரசிகர்... வித்தியாசமாக வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

ரசிகரின் ட்விட்டர் பதிவு| ஏ.ஆர்.ரஹ்மான்

ரசிகரின் ட்விட்டர் பதிவு| ஏ.ஆர்.ரஹ்மான்

  • News18
  • Last Updated :
  • Share this:
    விலையுயர்ந்த கார் வாங்கிய ரசிகர் ஒருவருக்கு அக்கறையுடன் வாழ்த்து கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

    ஆஸ்கர் விருது நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் இசை ரசிகர்கள் ஏராளம். தற்போது, விஜய் -அட்லீ கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

    கடந்த 15-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 72-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி இசையமைத்து வரும் விர்ச்சுவல் ரியாலிட்டி படமாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘லே மஸ்க்’ என்ற ஆங்கிலப் படத்திலிருந்து ‘சென்ட் ஆஃப் தி சாங்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    இசையில் புதுப்புது உயரங்களை எட்டி வரும் அவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்புக்கு எல்லை இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார் ரசிகர் ஒருவர். தான் வாங்கிய விலையுயர்ந்த காரில் நம்பர் பலகையில் ‘ஐ லவ் ஏ.ஆர்.ரஹ்மான்’ என்று எழுதியுள்ளார்.

    இதை புகைப்படமாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “நான் எப்பொழுதுமே உங்களது தீவிர ரசிகர். என்னுடைய கனவுகாரை நான் வாங்கியுள்ளேன். இதற்காக நான் நீண்ட காலத்துக்கு சந்தோஷமாக இருப்பேன். நான் வாங்கிய இந்த காரில் எனக்குப் பிடித்தவருடைய பெயர் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களுடைய இசையால் என்னுடைய வாழ்க்கையை மாற்றியதற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.



    இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

    வீடியோ பார்க்க: ரஜினியின் அடுத்த படம் பாபா-2வா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: