ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினிகாந்துடன் நடிப்பதுதான் எனது கனவு - சசிக்குமார்

ரஜினிகாந்துடன் நடிப்பதுதான் எனது கனவு - சசிக்குமார்

சசிக்குமார்

சசிக்குமார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதன் மூலமாக, இந்த வருடம் எனது கனவு நனவானது என்று சசிக்குமார் கூறியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் பேட்ட. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், சோமசுந்தரம், சனந்த் செட்டி, மேகா ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி டேராடூன், சென்னை, டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் படத்தில் இணைந்துள்ளார் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கும் சசிக்குமார், ``ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதன் மூலமாக, இந்த வருடம் எனது கனவு நனவானது. சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Actor Sasikumar, Karthik subbaraj, Petta, Rajinikanth