பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. பின்பு வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா வீட்டினுள் சென்றனர். இரண்டு வாரங்களிலே சுசித்ரா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்பு தொடர்ந்து வேல்முருகன், சுரேஷ், சனம் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். 70 நாட்களை கடந்த நிலையில் டபுள் எவிக்ஷனில் முதல் நபராக ஜித்தன் ரமேஷும், இரண்டாவது நபராக அறந்தாங்கி நிஷாவும் வெளியேற்றப்பட்டனர். ரியோ, அர்ச்சனா, கேபி, சோம் ஆகியோர் ஒன்றாகவே விளையாடுவதாக மற்ற போட்டியாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
கடந்த வாரத்தில் கமல் ஹாசனும் அதை சுட்டிக்காட்டி அர்ச்சனாவை வெளியேற்றினார். அர்ச்சனா வெளியேறி பின், இனிமே தான் வீட்டில் ஆட்டம் ஆரம்பம் என மீம் கிரியேட்டர்ஸ்கள் தெறிக்கவிட்டனர்.
இதையடுத்து 83 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக விளையாடி கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் ஆன அனிதா சம்பத் வீட்டிலிருந்து வெளியேற உள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் ஆஜித், ஷிவானி, கேபியை விட அனிதா சம்பத் நன்றாக விளையாடியதாகவும் மீம் கிரியேட்டர்ஸ்கள் தங்களின் ஆதங்கத்தினை தெரிவித்து வருகின்றனர்.