Doctor Sharmila : மனிதமும், சமூகநீதியுமே எனது அடையாளம்.! ஜாதி இல்லை.. டாக்டர் ஷர்மிளா நெத்தியடி

நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா, ஜாதி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதில் பலரது வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா, ஜாதி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதில் பலரது வரவேற்பை பெற்றுள்ளது.

  • Share this:
பல சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க நபர்களுடன், தமிழ் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் தோன்றியதற்காக பொதுமக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் டாக்டர் ஷர்மிளா. எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற டாக்டர் ஷர்மிளா, ஜெயா டிவியில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சியின் மூலம் தனது தொலைக்காட்சி வாழ்க்கையை தொடங்கினார்.

இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு டிவி சீரியல்கள் மற்றும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். மருத்துவ துறையை சேர்ந்த இவர் மறைந்த டாக்டர் மாத்ரூபூதத்துடன் இணைந்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பான புதிரா.? புனிதமா.? என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா, ஜாதி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதில் பலரது வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் சமீபத்தில் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரம் என்றால் அது சென்னை கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் மிக அருவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளது தான்.

ALSO READ | ’ஓ.என்.வி விருதை திருப்பி அளித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்’ கவிஞர் வைரமுத்து

ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளிடம் அநாகரீகமாக பேசுவது, அவர்களது உடலழகை வர்ணிப்பது உள்ளிட்ட பல தரக்குறைவான செயலில் ஈடுபட்டுள்ளான். விசாரணை நடத்திய போலீசார் அவனை கைது செய்து போக்ஸோ உட்பட 5 பிரிவின் கீழ் அவன் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

 ஆசிரியரின் கேடுகெட்ட நடத்தையை கண்டித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா இந்த சம்பவம் பற்றி ட்விட்டரில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

ALSO READ |  நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் துன்புறுத்தல் புகார்

PSBB பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியரை கண்டித்து டாக்டர் ஷர்மிளா போட்ட ட்விட்டிற்கு எதிர்வினையாற்றிய சிலர், பிறப்பால் நீங்களும் பிராமணர் தானே. நீங்களே இப்படி பேசலாமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு டாக்டர் ஷர்மிளா அவர்களது நெத்திபொட்டில் அடித்தார் போல பதிலை தெரிவித்துள்ளார். ஷர்மிளாவின் பதில் கீழ்வருமாறு:

"பலர் என்னை கேட்கும் கேள்வி : நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே…நீங்களே இப்படி பேசலாமா??! இதற்கான பதில்: பிராமணன்னா பெரிய கொம்பா. பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது. ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும். மனிதமும், சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல.

 

  

  

  

  

 ALSO READ | 'பிக் பாஸ் 5' நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

I don’t take pride in being identified by my caste…I rather prefer to be known for my work and contribution to society" என்று பதிவிட்டுள்ளார். ஜாதி ரீதியான கேள்வியை வைத்து தன்னை மடக்க பார்த்தவர்களுக்கு டாக்டர் ஷர்மிளா சரியான பதிலடி கொடுத்ததற்காக நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: