Home /News /entertainment /

அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பி.வி.சிந்து... இன்ஸ்டாவைக் கலக்கிய வீடியோ

அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பி.வி.சிந்து... இன்ஸ்டாவைக் கலக்கிய வீடியோ

பேட்மிண்டன் களத்தில் இறங்கும் போதெல்லாம் தனது அதிரடியான ஆட்டத்தால் "எதிராளிகளை" துவம்சம் செய்யும் பி.வி சிந்து ஆடியுள்ள சமீபத்திய ஆட்டம் தான் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

பேட்மிண்டன் களத்தில் இறங்கும் போதெல்லாம் தனது அதிரடியான ஆட்டத்தால் "எதிராளிகளை" துவம்சம் செய்யும் பி.வி சிந்து ஆடியுள்ள சமீபத்திய ஆட்டம் தான் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

பேட்மிண்டன் களத்தில் இறங்கும் போதெல்லாம் தனது அதிரடியான ஆட்டத்தால் "எதிராளிகளை" துவம்சம் செய்யும் பி.வி சிந்து ஆடியுள்ள சமீபத்திய ஆட்டம் தான் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் பிடபுள்யூஎஃப் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவுக்கு பெரிய அளவிலான அறிமுகமே தேவைப்படாது. பேட்மிண்டனில் உலக சாம்பியனான முதல் மற்றும் ஒரே இந்தியர் பி.வி சிந்து தான். அதுமட்டுமின்றி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் இரண்டாவது தடகள வீராங்கனையும் இவரே ஆவார்.

பேட்மிண்டன் களத்தில் இறங்கும் போதெல்லாம் தனது அதிரடியான ஆட்டத்தால் "எதிராளிகளை" துவம்சம் செய்யும் பி.வி சிந்து ஆடியுள்ள சமீபத்திய ஆட்டம் தான் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. அதெப்படி? பி.வி சிந்துவின் ஆட்டம் விளையாட்டு ரசிகர்களுக்கு மத்தியில் தானே பேசுபொருளாக வேண்டும்? என்று குழப்பமடைய வேண்டாம். சமீபத்தில் நடிகர் விஜய் வெளியாகிய 'பீஸ்ட்' திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு தான் பி.வி சிந்து ஆட்டம் போட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக பி.வி சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அரபிக் குத்து என்று கேப்ஷனிட்டு டான்ஸ் வீடியோ ஒன்றை ஷேர் செய்தார். மொத்தம் 3.2 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ள பி.வி சிந்துவின் குறிப்பிட்ட வீடியோ இதுவரை 2.3 லட்சத்திற்கும் மேலான லைக்ஸ் மற்றும் கிட்டத்தட்ட 1,400 கமெண்ட்களை பெற்றுள்ளது; அந்த வீடியோவில் பிவி சிந்து "தனக்கு தெரிந்த அளவிலான" அரபிக் குத்து ஆட்டத்தை போட்டுள்ளார். பேட்மிண்டன் களத்தில், நான்கு மூலைகளுக்கும் புயல் வேகத்தில் நகர்ந்து, பறந்து-பறந்து அட்டாக் செய்யும் பி.வி சிந்துவின் இந்த க்யூட் ஆன டான்ஸ் வீடியோ, பி.வி சிந்துவின் ரசிகர்களை மட்டுமின்றி, தமிழ் சினிமா ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளது.

ஆனால் நடிகர் விஜய் ரசிகர்கள் இதை ஒரு "ஆறுதல் பரிசாகவே" எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் முன்பு அரபிக் குத்து பாடலும், அது தொடர்பான சேலன்ஞ்களும் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரெண்ட் ஆனது. இதனாலேயே 'பீஸ்ட்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் விண்ணை எட்டியது. ஆனால் பீஸ்ட் ரிலீசுக்கு பின் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஏனெனில் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.



 




View this post on Instagram





 

A post shared by Sindhu Pv (@pvsindhu1)






 

இந்நிலையில் தான் பி.வி சிந்து அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் முன்னர் இந்த வீடியோ வெளியாகி இருந்தால், விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு 'எக்ஸ்ட்ரா ட்ரீட்' ஆக அமைந்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது மிகவும் 'லேட்' ஆக வெளியாகியுள்ள பி.வி சிந்துவின் இந்த அரபிக் குத்து டான்ஸ் வீடியோவை, விஜய் ரசிகர்களுக்கான ஆறுதல் பரிசு என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது?!
Published by:Elakiya J
First published:

Tags: Beast, PV Sindhu

அடுத்த செய்தி