• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியா - கோபி தம்பதியருக்கு செழியன், எழில், இனியா என்ற 3 பிள்ளைகள் இருப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழ் டிவி சேனல்களில் பிரபல முன்னணி சேனலாக இருந்து கொண்டிருக்கிறது விஜய் டிவி. நாள்தோறும் பல சீரியல்கள் தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வந்தாலும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள். சீரியல் என்றாலே சன் டிவி தான் என்ற இருந்த நிலையை முதல் முதலாக மாற்றியது விஜய் டிவி தான். ரசிகர்களின் பல்ஸ் அறிந்து அவர்களின் மனதை கவரும் வகையில் குறிப்பாக இளம் சின்னத்திரை ரசிகர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்து ஹிட் சீரியல்களை கொடுத்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வளர்ந்தது விஜய் டிவி.

அதன் பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி தமிழக சின்னத்திரை ரசிகர்கள் பெரும்பாலானோரை தன்பக்கம் ஈர்த்தது ஸ்டார் விஜய். தற்போது பல டிவி சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. தற்போது ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியின் பல சீரியல்கள் ரசிகர்களின் ஹிட் லிஸ்ட்டில் இருந்தாலும் அதில் முக்கியமான டாப் 5-ல் ஒன்றாக இருக்கிறது இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தான் ஓராண்டை நிறைவு செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீரியல் ஸ்டார்ட் ஆனா போது மாலை 6.30 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த சீரியலுக்கு ரசிகர்கள் தந்த பேராதரவு காரணமாக பிரைம் டைமிற்கு மாற்றப்பட்டு, அது முதல் இரவு 8.30 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிகை சுசித்ரா ஷெட்டி, பாக்கியலட்சுமி என்ற அப்பாவித்தனம் நிறைந்த குடும்பத்தலைவி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். சீரியல் நடிகர் சதீஷ்குமார் பாக்கியலட்சுமியின் கணவராக கோபி என்ற கேரக்டரில் நடிக்கிறார். பாக்கியா - கோபி தம்பதியருக்கு செழியன், எழில், இனியா என்ற 3 பிள்ளைகள் இருப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

Also read... விஷாலுக்கு வில்லனாக விருப்பமா? - இதே ஒரு வாய்ப்பு...!

மூவரில் மூத்தவன் செழியன் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் இருப்பது போலவும், இளையவன் எழில் சினிமாத்துறையில் பணிபுரிவது போலவும், மகள் இனியா பள்ளி செல்வது போலவும் காட்டப்பட்டு வருகிறது. சின்னத்திரை ரசிகர்கள் மனதில் பாக்கியலட்சுமி சீரியலுக்கென்று தனி இடம் கிடைத்துள்ள நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி

பாக்கியலட்சுமியாக நடிக்கும் நடிகை சுசித்ரா- ரூ.15,000

கோபிநாத்தாக நடிக்கும் நடிகர் சதீஷ்- ரூ.12,000

ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா- ரூ.12,000

இனியாவாக நடிக்கும் நேகா மேனன்- ரூ.8,000

பாக்கியாவின் மாமியார் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ராஜலட்சுமி- ரூ.12,000

ஜெனிபராக நடிக்கும் திவ்யா கணேஷ்- ரூ.10,000

செழியனாக நடிக்கும் வேலு லட்சுமணன்- ரூ.10,000

எழில் கேரக்டரில் நடிக்கும் விஷால்- ரூ.10,000

அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா- ரூ.10,000 என நாளொன்றுக்கு சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: