• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

  • Share this:
விஜய் டிவி-யில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் தான். அதுவும், இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பாரதியும் கண்ணம்மாவும் தங்களது இரு குழந்தைகளுடன் எப்போது இணைவார்கள் என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வண்ணம், புதுப்புது ட்விஸ்டுகளுடன் கதை வெளியாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், கடந்த வார இறுதி எபிசோடில், பாரதியும் கண்ணம்மாவும் ஒரே காரில் வந்ததை நினைத்து எரிச்சலடையும் வெண்பா, அமெரிக்கா செல்லும் பாரதியுடன் தானும் சென்று எப்படியாவது பாரதியை திருமணம் செய்ய வேண்டும் என்ற தனது திட்டம் ஹேமாவால் சொதப்பலாகி விட்டதே என்று கோபமடைகிறார்.

ஹேமாவுக்காக பாரதி என்ன வேணாலும் செய்வாரா? என்று தனது வீட்டு வேலைகாரியிடம் கோபமாக கேட்கிறார். இதற்கடுத்த காட்சியில், வேணுவும், சௌந்தர்யாவும் கோவிலுக்கு செல்ல முற்படும் போது, பாரதி ஒரு கையில் சூட்கேசுடன் மற்றொரு கையில் ஹேமாவை தூக்கிக்கொண்டு வருகிறார்.

இது என்னடா மீண்டும் பாரதி அமெரிக்கா புறப்படுகிறானா? என்ற அதிர்ச்சியில் சௌந்தர்யா கேட்க, இல்லை ஹேமாவை சமையல் அம்மா வீட்டில் விடப்போகிறேன் என்று பாரதி சொன்னதும் குடும்பமே சந்தோஷமடைகிறது. பிறகு ஹேமாவை சமையல் அம்மா வீட்டில் விடுகிறார் பாரதி. கண்ணம்மாவை பார்த்ததும் மிகுந்த சந்தோஷத்தில் அவரை ஹேமா கட்டி அணைக்கிறார்.

Also read: அயன் பட சண்டைக்காட்சியை ரீமேக் செய்த ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா பாராட்டு!

ஹேமாவுக்கு என்ன பிடிக்கும் என்பது குறித்து பாரதி விளக்க, எனக்கு தெரியும் என்று நோஸ் கட் கொடுக்கிறார் கண்ணம்மா. பின்னர், தயங்கி தயங்கி ரூ.1000 பணத்தை கண்ணம்மாவிடம் கொடுக்கிறார். இதற்கு அன்பை நான் பணத்திற்கு விற்கவில்லை என கோபமாக சொல்லும் கண்ணம்மா, ஹேமாவை எனது இன்னொரு மகளாக பார்த்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். இதோடு, எபிசோட் முடிவடைந்தது. இனி, ஹேமா மூலமாக பாரதியும் கண்ணம்மாவும் அடிக்கடி சந்திக்க நேரிடும்.

எனவே, வரப்போகிற எபிசோட்களும் விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். சமீபத்தில் கூட, பாரதி, கண்ணம்மா மற்றும் இரண்டு மகள்களுடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Also read: கணவரை பிரிந்த மியா கலிஃபா; விவாகரத்துக்கு கொடுத்த புது விளக்கம்!!

இது ஒருபுறம் இருக்க சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என யோசித்தாலும், பலர் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்று யோசித்திருப்பீர்கள். அதன்படி பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ரோஷினி (கண்ணம்மா) - ரூ. 20,000
அருண் பிரசாத் (பாரதி) - ரூ. 20,000
ரூபா ஸ்ரீ (சௌந்தர்யா) - ரூ. 15, 000
ரிஷி கேசவ் (வேணு) - ரூ. 12, 000
பரீனா (வெண்பா) - ரூ. 10, 000
அகிலன் - ரூ. 10, 000
கண்மணி (அஞ்சலி)- ரூ. 9000
செந்தில் குமாரி (பாக்கியலட்சுமி) - ரூ. 5000

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: