வெற்றிகரமான 2-வது நாள்... செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து கொண்டாடும் சிறிய பட்ஜெட் படங்கள்

கொரோனா காலங்களில் திரையரங்குகளில் வெளியாகிஇருக்கும் சிறிய பட்ஜெட் படங்கள் 2 நாள்கள் ஓடியதை வெற்றிகரமான ஓட்டம் என்று கொண்டாடிவருகின்றனர்.

கொரோனா காலங்களில் திரையரங்குகளில் வெளியாகிஇருக்கும் சிறிய பட்ஜெட் படங்கள் 2 நாள்கள் ஓடியதை வெற்றிகரமான ஓட்டம் என்று கொண்டாடிவருகின்றனர்.

 • Share this:
  சினிமா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஹாலிவுட்டில் டைட்டானிக் படத்தில் தொடங்கி முதல் கோலிவுட் 96 வரை  இரண்டு படங்களுமே அனைத்து மொழி ரசிகர்களாலும் மிகவும் ரசிக்கப்பட்ட படங்களாகும். காசு கொடுத்து திரையரங்குகள் செல்லும் ரசிகர்கள் தரமான படங்களையே எதிர்பார்க்கின்றனர் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

  தீபாவளி, பொங்கல் என்றால் கொண்டாடுவதற்கு எங்கு செல்கிறோமோ இல்லையோ, முக்கியமாக திரையரங்குகளுக்கு சென்று ஆட்டம் போடுவது தான் வழக்கம். ஆனால் பண்டிகை காலங்களில் முக்கியத்துவம் என்பது பெரிய பட்ஜெட் படங்களுக்கு தான் கிடைக்கும் என்பதை அனைவரும் அறிந்த ஒன்று.

  ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பித்த கொரோனா பாதிப்பினால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்பு கொரோனாவின் தாக்கம் சிறிது குறைய தொடங்கியதால் 6 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என நிபந்தனையும் விதித்தது. இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை.

  இந்த சமயத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறிய திரைப்படங்கள் தொடர்ந்து மூன்று வாரங்களாக திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. தப்பா யோசிக்காதீங்க, சூறாவளி, வாங்க படம் பார்க்கலாம், எனக்கு ஒன்னு தெரிஞ்சாகணும் என இஷ்டத்திற்கு பெயர் வைக்கப்பட்ட பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

  இரண்டு நாட்கள் இந்த திரைப்படங்கள் திரையரங்கில் ஓடி விட்டாலே வெற்றி என விளம்பரமும் செய்துகொள்கின்றனர். பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத இந்த காலகட்டத்தில், பல சிறிய படங்களும் வெளியாக பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக "பேய் இருக்க பயமேன்" திரைப்படத்தின் இயக்குனர் கார்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர் இயக்கிய பேய் இருக்க பயமேன் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

  இந்த சூழல் பெரிய பட்ஜெட் படங்களுக்கு கஷ்ட காலமாக இருந்தாலும், சிறிய படங்களுக்கு ஆரோக்கியமான ஒன்றாகவே இருப்பதாக தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான அந்தணன் தெரிவித்துள்ளார். சிறிய படங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பதே கஷ்டமான ஒன்று, இந்த காலத்தில் சிறிய படங்களின் இயக்குனர்கள் ரசிகர்களை கவர்ந்தால் இதன் மூலம் தங்களுக்கான வெற்றி பாதையை உருவாக்கிக்கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆனால் கடந்த ஒரு மாத காலத்தில் வெளியான எந்த திரைப்படமும் அப்படி ரசிகர்களை கவரவில்லை என்பது தான் நிதர்சமான உண்மை.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: