முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’சமுத்திர புத்திரன்’ ஹாலிவுட் படத்தை அமெரிக்காவில் கண்டுகளித்த விஜயகாந்த்!

’சமுத்திர புத்திரன்’ ஹாலிவுட் படத்தை அமெரிக்காவில் கண்டுகளித்த விஜயகாந்த்!

மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த்

மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த்

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் அவர் சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது அக்வாமேன் திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்கில் கண்டு மகிழ்ந்ததாக தனது மனைவி பிரேமலதா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

அக்வாமேன் ஹாலிவுட் படத்தை அமெரிக்காவில் உள்ள திரையரங்கில் பார்த்து மகிழ்ந்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாகவே விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் அவர் தற்போது அமெரிக்காவில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் அவர் சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது அக்வாமேன் ஆங்கில திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்கில் கண்டு மகிழ்ந்ததாக தனது மனைவி பிரேமலதா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அக்வாமேன் திரைப்படம் தமிழில் சமுத்திர புத்திரன் என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புகைப்படம் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பரவும் பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்பதை தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினிகாந்தின் வழிகாட்டியா விஜயகாந்த்? - ஸ்பெஷல் வீடியோ

First published:

Tags: Aquaman, Vijayakanth