நீர் வளத்தின் பாதுகாப்பைப் பற்றி புரிய வைக்கும் ரஜினி - டிஸ்கவரி சேனல்

Man v Wild | Rajinikanth | Discovery

நீர் வளத்தின் பாதுகாப்பைப் பற்றி புரிய வைக்கும் ரஜினி - டிஸ்கவரி சேனல்
பேர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: January 30, 2020, 11:14 AM IST
  • Share this:
பிரபல மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளது தொடர்பாக டிஸ்கவரி தொலைக்காட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

உலக அளவில்‌ புகழ்‌ பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம்‌, சூப்பர்ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ உடன்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளது.

டிஸ்கவரி தொலைக்காட்சியில்‌ ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்கிற நிகழ்ச்சி மிகவும்‌ பிரபலமான ஒன்று. இதில்‌ பியர் கிரில்ஸ் என்னும்‌ சாகச வீரர்‌, மயிர்‌ கூச்செறியும்‌ அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும்‌, விலங்குகளுக்கு மத்தியிலும்‌ செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம்‌ பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடத்துவார்‌.


இதுவரை இந்த நிகழ்ச்சியில்‌ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட்‌ நடிகைகள்‌ ஜூலியா ராபர்ட்ஸ்‌, கேட்‌ வின்ஸ்லெட்‌ ,டென்னிஸ்‌ வீரர்‌ ராஜர்‌ பெடரர்‌ , மற்றும்‌ சென்ற வருடம்‌ இந்திய பிரதமர்‌ நரேந்திர மோடி ஆகியோர்‌ பங்கேற்றுள்ளனர்‌.



பிரதமர்‌ மோடியுடன்‌ நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில்‌ பெரும்‌ வரவேற்பை பெற்றது. உத்தரகாண்டில்‌ உள்ள ஜிம்‌ கார்பெட்‌ தேசிய சரணாலயத்தில்‌ இந்நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இந்த சாகச பயணம்‌ உலகெங்கிலும்‌ பேசப்பட்டது. இப்போது இந்த நிகழ்ச்சி புதிய வடிவில்‌ Into the Wild with Bear Grylls என்ற தலைப்பில்‌ சூப்பர்ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ உடன்‌ கர்நாடகாவில்‌ உள்ள பாந்திப்பூர்‌ காடுகளில்‌ படமாக்கப்பட்டுள்ளது.



இது ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ பங்கு பெரும்‌ முதல்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்‌. அவரை திரையில்‌ அறிமுகப்படுத்திய இயக்குனர்‌ சிகரம்‌ கே பாலச்சந்தரின்‌ கவிதாலயா நிறுவனம்‌ சின்ன திரைக்கு அவரை முதன்‌ முதலாக டிஸ்கவரி தொலைக்காட்சி சார்பாக அழைத்து வருவதில்‌ பெருமை கொள்கிறது .

ஆபத்துகள்‌ நிறைந்த வனப்பகுதிகளில்‌ இயற்கையோடு ஒட்டி உயிர்‌ வாழும்‌ முறைகளை உணர்த்தும்‌ வகையில்‌ நம்‌ சூப்பர்ஸ்டார்‌ இந்த நிகழ்ச்சியில்‌ பங்கு பெற்றுள்ளதுடன் நீர்‌ வளத்தின்‌ பாதுகாப்பை பற்றி புரிய வைக்கிறார்‌.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், விமான நிலையத்தில் பேட்டியளிக்கையில், தனக்கு காட்டில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் முள் குத்தியதாக தெரிவித்திருந்தார்.
First published: January 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading