Home /News /entertainment /

நா.முத்துக்குமாரின் படைப்புகளுக்கான பதிப்புரிமையைப் பெற்ற நிறுவனம்.. பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் அவரின் எழுத்துகளைக் கொண்டு செல்ல திட்டம்

நா.முத்துக்குமாரின் படைப்புகளுக்கான பதிப்புரிமையைப் பெற்ற நிறுவனம்.. பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் அவரின் எழுத்துகளைக் கொண்டு செல்ல திட்டம்

கவிஞர் நா.முத்துக்குமார்.

கவிஞர் நா.முத்துக்குமார்.

டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனம் கவிஞர் நா.முத்துக்குமாரின் படைப்புகளுக்கான பதிப்புரிமையைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துகுமார் காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்தவர். தமிழின் ஈர்ப்பினால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் கற்று, யாப்பிலக்கணத்தையும் சங்க இலக்கியங்களையும் முறையாக பயின்றிருந்தாலும் அந்தப் புலமையை தன் வரிகளில் திணிக்காதவர் அவர். எல்லோராலும் ரசிக்கக்கூடிய எளிமையான வரிகளை மட்டுமே பாடல் மெட்டுக்குள் சேர்த்தவர்.

    நவீன கால தமிழ் சினிமாவில் காதல் பிரிவையும் காதல் தோல்வியையும் நா.முத்துக்குமார் அளவு வரிகளில் கொண்டு வந்த பாடலாசிரியர் நிச்சயம் இருக்க முடியாது. அவருக்கு உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் உண்டு. அவர் எழுதிய நூல்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனம் அவரின் படைப்புகளுக்கான பதிப்புரிமையைப் பெற்றுள்ளது.

    Also read: ’ஜனநாயக நாட்டில் ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ - நகைச்சுவை நடிகர் செந்தில் கருத்து

    இதற்காக இன்று மாலை அந்தப் பதிப்பகம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் விஜய், இயக்குநர் ராம், எழுத்தாளரும் இயக்குநருமான அஜயன்பாலா, வழக்கறிஞர் சுமதி ஆகியோருடன் நா.முத்துக்குமாரின் மனைவி திருமதி ஜீவா மற்றும் அவரின் மகன் ஆதவன் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published:

    Tags: Na Muthukumar, Songs

    அடுத்த செய்தி