ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"என்னை துணிகளை கழட்டி விட்டு ஆட சொன்னார்" - இயக்குனர் மீது நடிகை புகார்

"என்னை துணிகளை கழட்டி விட்டு ஆட சொன்னார்" - இயக்குனர் மீது நடிகை புகார்

நடிகை தனுஸ்ரீ தத்தா

நடிகை தனுஸ்ரீ தத்தா

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தன்னை துணிகளை கழட்டி விட்டு இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி படப்பிடிப்பு தளத்தில் ஆடக்கூறியதாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் நானா படேகர் மீது புகார் தெரிவித்திருந்தார். 

  நானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று தனியார் தொலைக்காட்சியின் நேர்காணல்  ஒன்றில் தனுஸ்ரீ தத்தா தெரிவித்திருந்தார். அதில், கடந்த 2008- ம் ஆண்டு `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் நானா படேகர் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.

  இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த நானா படேகர், "நான் 2008 –ம் ஆண்டே இந்த சர்ச்சைக்கு பதிலளித்துவிட்டேன்” என்று கூறினார். தனுஸ்ரீ தன் மகள் வயதுடையவர்  என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். திரைத்துறையில் 35 ஆண்டு காலத்தில் யாரும் தன்னை குற்றம் சாட்டியதில்லை என்றவர், தன் மீது குற்றம்சாட்ட தனுஸ்ரீயை தூண்டியது யார் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் பதிலளித்தார்.

  இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த தனுஸ்ரீ, படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடிகர் இர்பான் கானின் முக பாவனைக்காக என்னை இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி துணிகளை கழட்டி விட்டு ஆடச்சொன்னார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இர்பான் கான், வேண்டாம் அவர் ஆடைகளை கலைந்து விட்டு ஆடவேண்டாம் என்று கூறிவிட்டார். அவரின் வார்த்தைகளை நான் பாராட்டிய ஆகவேண்டும் என்று தனுஸ்ரீ பேட்டியில் தெரிவித்துள்ளார். இதேபோல படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் சுனில் ஷெட்டியும், அவ்வாறு கூறியதற்காக இயக்குனர் விவேக்கை கடுமையாக திட்டினார் என்றும் தனுஸ்ரீ கூறியுள்ளார்.

  தனுஸ்ரீயின் இந்த தொடர் புகார்கள் #METOO என்ற ஹேஷ்டாக்கின் மூலமாக பிரபலமாகி வருகிறது. இவரை பின்பற்றி மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த புகார்களை வெளிப்படையாக தெரிவிப்பார்கள் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

  ALSO READ...

  காலா வில்லன் நிஜத்திலும் வில்லன் தான்!

  "தனுஸ்ரீக்கு என் பொண்ணு வயசு" - நானா படேகர்

  ALSO WATCH...

  ' isDesktop="true" id="56483" youtubeid="QCnAKNIOtYc" category="entertainment">

  Published by:SPDakshina Murthy
  First published:

  Tags: Actress taunshree, Director Vivek Agnihotri, Nana Patekar, Sexual harrasment, Verbally harrased