ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சாய் பல்லவியுடன் 2-வது திருமணமா? - விஜய் தரப்பு பதில்

சாய் பல்லவியுடன் 2-வது திருமணமா? - விஜய் தரப்பு பதில்

இயக்குநர் விஜய் | சாய் பல்லவி

இயக்குநர் விஜய் | சாய் பல்லவி

இயக்குநர் ஏ.எல். விஜய் நடிகை அமலாபால் ஆகியோருக்கு கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சாய் பல்லவியுடனான திருமணம் குறித்து வெளியான தகவலுக்கு இயக்குநர் விஜய் தரப்பினர் பதிலளித்துள்ளனர்.

  கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். தொடர்ந்து மதராசபட்டிணம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் தற்போது வாட்ச் மேன் மற்றும் தேவி 2 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

  கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடிகை அமலாபாலுடன் இவருக்கு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்தனர்.

  இதையடுத்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவர்களுக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்.

  இதையடுத்து இருவரும் தங்களது பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இயக்குநர் விஜய் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி பட வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

  இந்நிலையில் இயக்குநர் விஜய் நடிகை சாய் பல்லவியை 2-வதாக திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு விளக்கமளித்துள்ள விஜய் தரப்பு, இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் இருவரும் நல்ல நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாகவும் கூறியுள்ளது.

  விரைவில் ரிலீசாக இருக்கும் வாட்ச்மேன், தேவி 2 பட பத்திரிகையாளர் சந்திப்பில் தனது திருமணம் குறித்த தகவலுக்கு இயக்குநர் விஜய் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான கரு படத்தில் நடிகை சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  அஜித்தின் 10-ம் தேதி சென்டிமென்ட்... அப்படி என்னதான் இருக்கு? - வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actress sai pallavi