முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராட்சசன் படத்துக்கு 8 ஆஸ்கர் விருதுகள் கொடுத்த பிரபல இயக்குநர்?

ராட்சசன் படத்துக்கு 8 ஆஸ்கர் விருதுகள் கொடுத்த பிரபல இயக்குநர்?

ராட்சசன் படத்திற்கு ஆஸ்கர் விருதுகளை வழங்கி வித்தியாசமான முறையில் பிரபல இயக்குநர் ஒருவர் பாராட்டியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

ராட்சசன் படத்திற்கு ஆஸ்கர் விருதுகளை வழங்கி வித்தியாசமான முறையில் பிரபல இயக்குநர் ஒருவர் பாராட்டியுள்ளார்.

முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்துள்ள படம் 'ராட்சசன்'. இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி, ராமதாஸ், நிழல்கள் ரவி, காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் படத்தை பார்த்த திரைத்துறையினர் பலரும் படத்தை பாராட்டி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ரஜினிகாந்தைத் தொடர்ந்து படத்தை பாராட்டும் விதமாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ராட்சசன் படத்துக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள். சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒலித்தொகுப்பு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த இயக்குநர், சிறந்த படம், 2018-ன் சிறந்த அனுபவம்” என்று வரிசைப்படுத்தி பாராட்டியுள்ளார்.

மேலும் பார்க்க: #METOO பிரஸ் மீட்டில் சலசலப்பு: வீடியோ

First published:

Tags: Director vignesh shivan, Rajinikanth, Ratsasan, Vishnu vishal