• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அட்டூழியம் அல்ல...பசி...டெலிவரி பாய்க்கு ஆதரவாக நிற்கும் விக்னேஷ் சிவன்

அட்டூழியம் அல்ல...பசி...டெலிவரி பாய்க்கு ஆதரவாக நிற்கும் விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்| டெலிவரி பாய்ஸ்

விக்னேஷ் சிவன்| டெலிவரி பாய்ஸ்

உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் செய்த தவறை சுட்டிக்காட்டி பலரும் விமர்சித்து வந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் செய்த தவறை சுட்டிக்காட்டி பலரும் விமர்சித்து வந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

    வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் இன்றைக்கு மக்களின் அன்றாட தேவைகள் கூட நவீனமயமாகிவிட்டன. அதிலும், 'ஆன்லைன் ஷாப்பிங்' என்று ஒன்று வந்த பின், எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து ஆடைகள் தொடங்கி, இப்போது உணவை கூட ஆன்லைனில் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. தேவையான உணவை ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் இருக்கும் இடத்திற்கே வந்து டெலிவரி செய்து விடுகிறார்கள். அப்படி, டெலிவரி செய்வதற்கு 'டெலிவரி பாய்ஸ்' என்ற பெயரில் ஏராளமான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்ய வேண்டிய உணவை கொஞ்சம் எடுத்து டெலிவரி பாய் ஒருவர் சாப்பிடுகிறார். மீண்டும் அதை பேக் செய்து ஆரடர் பையில் வைத்து விட்டார். இதனை வீடியோ எடுத்த நபர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட அது வைரலானது.

    இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரையும், அந்த நிறுவனத்தையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் இதை அட்டூழியம் என்றும் சமூகவலைதளங்களில் பேசினர்.

    இதுகுறித்து கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன், “பொறுமையை மறக்கடித்த பசியின் கொடுமை பாவம் அவரை மன்னியுங்கள். மறந்து விடுங்கள். அட்டூழியம் அல்ல. பசி” என்று பதிவிட்டுள்ளார்.



    விஜய்சேதுபதி பிரஸ் மீட்டில் சலசலப்பு - நடந்தது என்ன - முழு வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: