செல்வராகவனுடன் பணிபுரியும் கனவு நனவாகிவிட்டது - விக்னேஷ் சிவன்

news18
Updated: October 22, 2018, 5:05 PM IST
செல்வராகவனுடன் பணிபுரியும் கனவு நனவாகிவிட்டது - விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் செல்வராகவன்
news18
Updated: October 22, 2018, 5:05 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படத்தின் பாடலாசிரியராக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்துள்ளார்.

போடா போடி, நானும் ரவுடிதான் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையையும், அடையாளத்தையும் தேடிக் கொண்டவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். கடந்த பொங்கல் அன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வந்தது. இந்தப் படம் விக்னேஷ் சிவனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. சூர்யாவுக்கு மீண்டும் ஒரு வெற்றி வாய்ப்பு கொடுத்ததாக இந்தப் படம் அமைந்திருந்தது.

அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் செல்வராகவனுடன் முதன்முறையாக இணைந்துள்ள என்ஜிகே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகை சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பாடலாசிரியராக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், இயக்குனர் செல்வராகவனுடன் பணிபுரிய வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறி உள்ளதாகவும், படத்திற்காக நல்ல பாடல்களை எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். என்.ஜி.கே. தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.Also see...

First published: October 22, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...