ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

`மாடில நிக்கிற மானுகுட்டி’: வடசென்னை பாடலின் புரமோ வீடியோவை வெளியிட்ட தனுஷ்!

`மாடில நிக்கிற மானுகுட்டி’: வடசென்னை பாடலின் புரமோ வீடியோவை வெளியிட்ட தனுஷ்!

வடசென்னை படத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்

வடசென்னை படத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வடசென்னை படத்தில் இடம்பெற்றுள்ள மாடில நிக்கிற மானுகுட்டி பாடலின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

  பொல்லாதவன், ஆடுகளம், படத்தில் இணைந்த தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் இந்தக் கூட்டணி தற்பொழுது வடசென்னை படத்தில் இணைந்துள்ளது. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என மூன்று படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் வெற்றிமாறனின் வட சென்னை குறித்த பார்வை கவனிக்கதக்கது. பெரும்பாலும் இவரது படங்கள் பெரும்பான்மையான மக்களின் அன்றாட வாழ்க்கையின் பயணத்தைச் சார்ந்தே இருப்பதால் வெற்றிமாறனின் 3 படங்களும் வெற்றியடைந்தது.

  `விசாரணை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் `வடசென்னை’. தனுஷ் நாயகனாக நடித்துவரும் இந்தப் படத்தின் பெயருக்கு ஏற்ப வடசென்னையை மையமாக கொண்டே படத்தின் கதை நகரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  இந்த மாதம் 17-ம் தேதி வடசென்னை படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள `மாடில நிக்கிற மானுகுட்டி’ என்ற பாடலின் புரமோ வீடியோவை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actor dhanush, Tweet, Vada chennai, Vetrimaran