• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'எதிர்ப்பதும், எதிர்ப்பை ஆதரிப்பதும் ஜனநாயகம்’ - வெற்றிமாறன்

'எதிர்ப்பதும், எதிர்ப்பை ஆதரிப்பதும் ஜனநாயகம்’ - வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன்

"நிர்வாகத்தின் அதிகாரம் மக்களால் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகிறது. அது மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்."

  • Share this:
    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத் திருத்த கொள்கைகளுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியிருக்கிறது.

    இந்த பிரச்னை சர்வதேச ஐகான்களான பாடகி ரிஹானா, மியா கலீஃபா உள்ளிட்ட பிரபலங்கள், விவசாயிகளின் எதிர்ப்புக்கு ஆதரவாக ட்வீட் செய்தது, மறுமுனையில் எதிர்வினைகளைத் தூண்டியது. தமிழ் சினிமா பிரபலங்களில் ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து, இப்போது இயக்குனர் வெற்றிமாறன் விவசாயிகள் எதிர்ப்பு குறித்து ஒரு வலுவான கருத்தை வெளியிட்டுள்ளார்.

    Protest is the expression of a People who are not heard otherwise.
    The power of governance is given to the
    Government...

    Posted by Vetri Maaran on Thursday, 4 February 2021


    "எதிர்ப்பு என்பது தங்கள் கருத்தை கேட்காதவர்களை நோக்கி எழும், பாதிக்கப்பட்ட மக்களின் வெளிப்பாடு. நிர்வாகத்தின் அதிகாரம் மக்களால் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகிறது. அது மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும். கார்ப்பரேட் ஒத்துழைப்பாளர்களாக செயல்பட வேண்டாம். விவசாயிகள் தேசத்தை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் உரிமைகளுக்காக எதிர்ப்பு தெரிவிப்பதும், எதிர்ப்பை ஆதரிப்பதும் ஜனநாயகம்" என இயக்குநர் வெற்றிமாறன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: