ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வடிவேலுவின் சர்ச்சைப் பேச்சு... வன்மம் வேண்டாம் - வெங்கட் பிரபு

வடிவேலுவின் சர்ச்சைப் பேச்சு... வன்மம் வேண்டாம் - வெங்கட் பிரபு

இயக்குநர் வெங்கட் பிரபு | வடிவேலு

இயக்குநர் வெங்கட் பிரபு | வடிவேலு

சில தினங்களுக்கு முன் நடிகர் வடிவேலு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் சிம்புதேவனை அவன், இவன் என பேசினார். இதையடுத்து அவரை பலரும் விமர்சனம் செய்தனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    24-ம் புலிகேசி பட தயாரிப்பாளர் சங்கர் மற்றும் படத்தின் இயக்குநர் சிம்புதேவன் குறித்து வடிவேலு பேசியது சர்ச்சையாகியுள்ளது. அதற்காக பலரும் வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

    பிரபல இயக்குநர் சங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் சிம்புதேவன் முயற்சித்தார். ஆனால் அந்தப் படத்தில் இருந்து நடிகர் வடிவேலு வெளியேறிதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகர் வடிவேலு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் சிம்புதேவனை அவன், இவன் என பேசினார். இதையடுத்து அவரை பலரும் விமர்சனம் செய்தனர்.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு “எப்போதுமே இயக்குநர் தான் கப்பலின் கேப்டன். ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு, அதுவே நஷ்டம் என்றால், ‘டைரக்டர் சொதப்பிட்டான்பா’ இதுதான் பரவலாகப் பேசப்படும் ஒன்று. என்ன கொடுமை சார் இது!.

    ஒரு ஆகச்சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத்து மிகப்பெரிய வெற்றியைத் தந்த ஒரே தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை தரக்குறைவாகப் பேசியது என்னை மனமுடையச் செய்தது. இயக்குநர் சிம்புதேவனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர் அருமையான படைப்பாளி மட்டுமில்லை. மிகச்சிறந்த மனிதர்.

    ஷங்கர் அவர்களைப் பற்றி யாரும் சொல்ல அவசியமே இல்லை. அவர் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர். எல்லோரும் இங்கு மக்களை மகிழ்விக்கத்தான் இருக்கின்றோம். இதில் வன்மம் வேண்டாமே. அன்பை மட்டும் வளர்ப்போம்” என்று கூறியுள்ளார்.

    வீடியோ பார்க்க: கார்த்தியை எதிர்த்து போட்டியிடும் பிரசாந்த்!

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Vadivelu, Venkat Prabhu