தேசிய விருது காத்திருக்கிறது... சர்வம் தாளமயம் படத்தை பாராட்டிய வசந்தபாலன்

சர்வம் தாளமயம்

சர்வம் தாளமயம் படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்த பாலன் தேசிய விருது காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சர்வம் தாளமயம் படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்த பாலன் தேசிய விருது காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறைவு பெற்றிருக்கின்றன. படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ரவியாதவ் ஒளிப்பதிவு செய்ய அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

    முன்னதாக 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. அதேவேளையில் ராஜீவ் மேனனுக்கு நெருக்கமான திரைத்துறை நண்பர்களுக்கு படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

    படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்த பாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,  "நேற்று இரவு ஜீவியின் அன்பு அழைப்பின் பேரில் சர்வம் தாளமயம் திரைப்படத்தை காண வாய்ப்பு கிட்டியது. இசை திரைப்படங்கள் மீது எனக்கு அலாதியான பிரியம். WHIPLASH என்ற ஆங்கில திரைப்படத்தின் மீது எனக்கு தணியாத காதல் உண்டு. குரு சிஷ்ய உறவை மையமாக கொண்டு ஒரு இசைப்படத்தை உருவாக்குவது மிக கடினமான காரியம். அப்படத்திற்கு கதை எழுத ஆழமான இசையறிவு தேவை.

    இசைக்குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் மேனன் அவர்கள் இந்த கதையை மிக அழகாக, ஆழமாக, நுட்பமாக, சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். நெடுமுடிவேணு மிருதங்க வித்வானாக வாழ்ந்துள்ளார். தேசிய விருது காத்திருக்கிறது. ஆயிரம் நமஸ்காரங்கள் வேணு சார்.

    ஜீவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞனாக தன் மெய் வருத்தி நடித்துள்ளார். அவர் கண்களில் தெறிக்கும் பதின்வயது குழப்பம், பதட்டம், தடுமாற்றம், அழுகை, வெறி, ஏக்கம், காதல், குருபக்தி இப்படி அத்தனை உணர்வுகளையும் திரையில் கடத்தியுள்ளார். ஜீவி தவிர இன்னொருவர் பீட்டராக வாழ்ந்திருக்க இயலாது. வாழ்த்துகள் ஜீவி.



    ஏஆர்ஆர் நம்மை சர்வம் தாளமயம் என்று இந்த உலகை நுண்ணிப்பாய் கேட்க செய்துள்ளார். சற்றே கண்ணை மூடினேன். உலகின் சப்தங்களை இதயத்தால் கேட்க துவங்கினேன். மனசு சொன்னது சர்வம் தாள மயம்" என்று கூறியுள்ளார்.

    உஷார்! - சுங்கச்சாவடியில் நூதன மோசடி - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published: