• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழ் ராக்கர்ஸில் ஏன் தெலுங்கு, மலையாள படங்கள் வெளியாவதில்லை - விஷாலிடம் கேட்கும் வசந்தபாலன்

தமிழ் ராக்கர்ஸில் ஏன் தெலுங்கு, மலையாள படங்கள் வெளியாவதில்லை - விஷாலிடம் கேட்கும் வசந்தபாலன்

இயக்குநர் வசந்தபாலன்

இயக்குநர் வசந்தபாலன்

எனது படங்களின் தோல்வி இங்குள்ள கட்டமைப்பால் நடக்கப்போகிறது - வசந்தபாலன்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழ் ராக்கர்ஸில் ஏன் தெலுங்கு மலையாள படங்கள் வெளியாவதில்லை என்று இயக்குநர் வசந்தபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பொதுநலன் கருதி என்ற ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வசந்தபாலன், “சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் சரியான திரையரங்குகள் கிடைப்பதில்லை. பரியேறும் பெருமாள் படத்தை பெரிய இயக்குநர் தயாரித்தாலும் திரையரங்குகள் கிடைக்கவில்லை. தற்போது வெளியான சர்வம் தாளமயம், பேரன்பு படங்களின் காலைக் காட்சிகளைப் பார்க்க திரையரங்குகளுக்குச் சென்றால் படம் திரையிடப்படவில்லை. சிறிய படங்கள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பேரன்பும், சர்வம் தாளமயம் படமும் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகிவிட்டன. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் துப்பறிவாளனாக இருக்கிறார். இரும்புத்திரை கொண்டு அடக்குகிறார், என்னென்னவோ செய்கிறார். தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிக்கலாம் அல்லவா. இதையெல்லாம் ஒழிக்கிறோம் என்று கூறித்தானே பதவிக்கு வந்தார்கள்.

    Actor Vishal

    எனக்கு பயமாக இருக்கிறது. நாளை என்னுடைய படமும் தமிழ் ராக்கர்ஸில் வந்துவிட்டால் எங்கே போவது? இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம் தானே எங்களைக் காப்பாற்ற வேண்டும். திரையரங்குகளுக்கு வருவதற்கு ஆளே இல்லை. உலகில் உள்ள பலரும் பேரன்பு படத்தை பாராட்டிவிட்டார்கள். ஆனால் தமிழ் ராக்கர்ஸில் படம் வெளிவந்துவிட்டால் யார் திரையரங்குக்குச் சென்று பார்ப்பார்கள். சிறு படங்களின் நிலைமை இதுதான். இந்த உணமையை மறைத்துக் கொண்டிருக்கிறோம்.

    ஏன் தெலுங்கு படங்கள், மலையாளப் படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வெளியாவதில்லை. ஏன் தமிழ்ராக்கர்ஸைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கேஜிஎஃப் என்கிற படம் இன்னும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகவில்லை. இரண்டுபேரைப் பிடித்துவிட்டால் அமைதியாக இருக்கிறீர்களா? எனது படங்களின் தோல்வி இங்குள்ள கட்டமைப்பால் நடக்கப்போகிறது. அப்புறம் என்னைப் போன்ற நலிந்த கலைஞர்களுக்காக இளையராஜாவைக் கொண்டு கச்சேரி நடத்த வேண்டும். முதலில் தமிழ் திரையுலகை இழுத்து மூடுங்கள். இதற்கு ஒரு தீர்வு காணலாம்.

    மாலில் ஒரு பைக்கை பார்க்கிங் செய்தால் ஒரு மணி நேரத்துக்கு ரூ.40 வாங்குகிறார்கள். இதையெல்லாம் ஒழித்துவிடுவேன் என்று வாக்குறுதி அளித்துதானே பதவிக்கு வந்தீர்கள். முழு வேலையில் உள்ளவர்கள் தலைவர் பதவிக்கு வரவேண்டாம். செய்ய வேண்டியதைச் செய்யாமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று ஆவேசமாக பேசினார்.

    சென்னையில் 55 வயதான காவலாளி 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: