இந்திப் படத்தை ரீமேக் செய்கிறேனா? வசந்தபாலன் விளக்கம்

இந்திப் படத்தை ரீமேக் செய்கிறேனா? வசந்தபாலன் விளக்கம்

இயக்குநர் வசந்தபாலன்

தி லிஃப்ட் பாய் என்கிற இந்திப் படத்தை வசந்தபாலன் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதை அவர் மறுத்திருக்கிறார்.

  • Share this:
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி ‘ஆல்பம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன். தொடர்ந்து எதார்த்த சினிமாவை கையிலெடுத்த வசந்தபாலன் ‘வெயில்’ என்ற தனது இரண்டாவது படத்திலேயே தேசிய விருது பெற்றார். அத்திரைப்படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து வெளியான ‘அங்காடித் தெரு’ திரைப்படமும் வசந்தபாலனை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்தது.

அடுத்தடுத்து வெளியான அரவான், காவியத் தலைவன் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நார்வே விருது விழாவில் காவியத்தலைவன் திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றது. தற்போது ஜி.வி.பிரகாஷ், அபர்னதி நடித்துள்ள ‘ஜெயில்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் வசந்தபாலன்.  இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் வசந்தபாலன் தனது அடுத்தபட வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் ‘தி லிஃப்ட் பாய்’ என்கிற இந்தி படத்தை அவர் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான.

இதுகுறித்து ட்விட்டரில் விளக்கமளித்திருக்கும் வசந்தபாலன், “பல முக்கியமான இணையதளங்களில் நான் இந்தியில் வெளியான ‘Lift boy’ திரைப்படத்தை ரீமேக் செய்யப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அது முற்றிலும் முற்றிலும் தவறான தகவல்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.ஆனால் அர்ஜூன் தாஸை நாயகனாக வைத்து படம் இயக்க இருப்பதாக வெளியான தகவலை வசந்தபாலன் மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: